தனித்திரு ! விழித்திரு !


தனித்திருந்தாலும் விழித்திருப்போம் !

தனித்திருந்தாலும் விழித்திருப்போம் !
தரணியிலே செழித்திருப்போம்!

கூட்டமாகக் கூடமாட்டோம் !
கொரனாவைத் தேடமாட்டோம் !
தொற்றைப் பெற்று வாடமாட்டோம் !
தோல்வி மாலை சூடமாட்டோம் !

வீடு மட்டுமே இன்பம் !
வீதி வந்தா துன்பம் !
அரசு விதியை மதிப்போம் !
அதன் படியே நடப்போம்.!

புத்தகங்கள் படிக்கின்றோம் !
புத்தியைத்தான் வளர்க்கின்றோம்.!
கதைகள் பல கேட்கின்றோம் !
கருத்துடனே இருக்கின்றோம் !

கையை நன்கு கழுவுகின்றோம்.!
மொட்டை மாடியில் உலவுகின்றோம் !
முகக்கவசம் போட்டுக் கொண்டோம் !
வீட்டுக் குள்ளே பூட்டிக் கொண்டோம் !

உலகமோ மிரண்டு இருக்குது !
உள்ளமோ அரண்டு இருக்குது !
வீட்டிற் குள்ளே இருந்தாலே 
விடியலும் நன்றாய் விடியுது !

தனித்திருந்தாலும் விழித்திருப்போம் !
தரணியிலே செழித்திருப்போம் !

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments