மகேந்திர பாபு - இசைப்பாடல்கள்
சீமைக் கருவேல மரம்
சீமையிலிருந்து வந்த மரம்
மண்ணைச் சீர் கெடுக்க வந்த மரம்
காடு வயலை அழிச்சு இப்போ
கண்மாயிலும் கால் பதிச்ச மரம்.
வேலியாகத்தான் வந்தது இங்கே
நிலத்தடி நீரும் போனதெங்கே ?
வளமை மிகுந்த மண்ணைத்தானே
வறுமையாகத்தான் மாற்றியதே !
வானமும் பொழிய மறுக்குதே
நம்மை வறுமையும் இப்போ நெறுக்குதே !
வேலியும் நீரைச் சுருக்குதே !
வேதனையைத் தினமும் பெருக்குதே !
மண்ணின் ஆழம் வரைக்கும் செல்லுதையா !
மனுச வாழ்வை இப்போ கொல்லுதையா !
பறவைகளும் கூடு கட்டலையே !
விலங்குகளும் வந்து நிக்கலயே !
வேருடன் புடுங்கி எறிய வேண்டும்
அதன் தீமையும் மக்கட்குத் தெரிய வேண்டும்
காணும் இடமெங்கும் அழிக்க வேண்டும்
நல்ல காற்று மரங்கள் தழைக்க வேண்டும்.
காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சுதையா !
வெப்பமும் எங்கும் நிறைஞ்சதையா !
நல்ல கால நிலையும் குறைஞ்சதையா !
நல்ல காடு வயலும் மறைஞ்சதையா !
சீமைக் கருவேல மரங்களை ஒழித்திடவே
மக்களும் ஒன்றாய்க் கூடிடணும்
மண்ணும் மக்களும் செழித்திடவே
கும்மிப் பாட்டைத் தினமும் பாடிடணும் !
பாடல்
மு.மகேந்திர பாபு ,
பேசி - 97861 41410.
இயற்கை பானம் - பாடல் , மு.மகேந்திர பாபு.
மத்தியான உச்சி வெயில் மண்டயத்தான் பொளக்குதுங்க
கோடை மழை ஆறு போல உடம்புல வேர்வை ஓடுதுங்க
நாக்கு வறண்டு போக நாடி நரம்பு தளர்ந்து போக
தாகந்தான் கூடுதே நம்ம தேகந்தான் வாடுதே !
தாகம் தீர்க்க இளநிதானே இருக்குது
நீங்க தவிர்த்துப் போக மனசு ரொம்ப வலிக்குது
செவ்விளநி சிரிக்குதையா மரத்தில
ஒன்னு சீவித்தாரேன் பிடிங்க உங்க கரத்தில
நெடுநெடுனு வளர்ந்து நிக்குது பனை மரம்
ஏழை மக்களுக்கு அப்ப அது பண மரம்
பக்குவமா இறக்கி வச்ச பதனி பாருங்க
உங்க உடம்புக்குத்தான் தெம்பு கிடைக்கக் குடிச்சுப் பாருங்க
விரலைப் போல நீண்டிருக்குது வெள்ளரிப் பிஞ்சு
சின்னப் பிள்ளை போல விரும்பி நீயும் நித்தமும் கொஞ்சு
வைரம் பாஞ்ச உடம்புக்குத்தான் குடிக்கனும் கூழு
நோயும் நொடியும் அண்டாம நீயும் வாழு
சூட்டைத் தணிக்க குடிக்கலாமே நீருமோரு
நுங்கைப் போல சத்து வேறெது கூறு
தாகம் தீரக் குடிக்கலாமே தர்ப்பூசணிச் சாறு
பழங்களாலே பலன் பெறலாம் நீயும் பாரு
இயற்கையாகக் கிடைக்குதையா நம்ம பானம்
இத விட்டுப் புட்டுக் குடிப்பதென்ன வேற பானம்
வேற பானம் குடிச்சாத்தான் கூடுதோ மானம்
இத்துப் போன உடம்புலதான் தெம்பையே காணோம் !
நம்ம இயற்கை பானம் குடித்திடுவோம் இன்பமாகத்தான்
எழுச்சி கொண்டு செயல்படுவோம் துன்பம் நீங்கத்தான்
விவசாயி வளம் பெறனும் நம்ம காசிலே
நாமளுந்தான் நலம் பெறணும் இயற்கை உணவிலே !
மு.மகேந்திர பாபு.
புதிய உலகம் படைக்கப் பிறந்தோம் நாங்கள்
இனி பூக்கள் போல உதிர்வதில்லை நாங்கள்
பூமிப் பந்தைப் புரட்டிப் போடுவோம் நாங்கள்
புதுமை செய்து புரட்சி செய்வோம் நாங்கள்
கல்விதானே எங்களுக்கு இரு கண்கள்
கவலை அழித்து சாதிப்போம் நாம் புதுமைப் பெண்கள்
அடுப்படியில் இடுப்பொடிய இருந்ததெல்லாம் அன்று
அகிலம் போற்ற உயர்கின்றோம் புதுமைப் பெண்கள் இன்று
அச்சம் மடம் நாணம் எல்லாம் உள்ளுக்குள்ளதான்
அடிமை விலங்கு அடிமையாகும் சொல்லுக்குள்ளதான்
தலை குனிந்து நடக்க மாட்டோம் எங்கள் வாழ்விலே
தலை குனிவைத் தரவும் மாட்டோம் எங்கள் வாழ்விலே
சாதனைகள் எழுதிச் செல்வோம் ஏடு தன்னிலே
வேதனைகள் நீங்கச் செய்வோம் வீடு தன்னிலே
போதனைகள் நித்தம் சொல்வோம் நாடு தன்னிலே
சோதனைகள் தூக்கிக் கொல்வோம் தோள்கள் தன்னிலே !
மனித நேயம் காத்துதானே மாற்றம் செய்குவோம்
மரங்கள் வளர்த்து பசுமை காக்க ஏற்றம் செய்குவோம்
சாதி மதம் தூக்கி எறிவோம் மனதை விட்டுத்தான்
சாதனைகள் தொடர்ந்து செய்வோம் அச்சம் விட்டுத்தான்
விண்கலத்தில் சென்றிடுவோம் வீர மங்கையாய்
வீரத்திலும் ஜொலித்திடுவோம் வெற்றி வேங்கையாய்
வீடும் நாடும் முன்னேறும் எங்கள் செயல்களால்
ஏடும் பாடும் பெண்களைத்தான் நாள் தோறுமே !
வான் வெளியில் வலமும் வருவோம் நாங்கள்
தேன் மொழியில் குரலும் தருவோம் நாங்கள்
மீன் விழியில் சேதி சொல்வோம் நாங்கள்
நான் என்ற நம்பிக்கை உண்டு பெண்களுக்கே !
மு.மகேந்திர பாபுவின் பாடல்.
எங்க மண்ணும் மனசும் ஒன்னுதான்
கருணை தெரியும் கண்ணுதான்
ஆதித்தமிழன் நாங்கதான் - உலகம்
ஆளும் தமிழன் நாங்கதான்
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரதானடா !
தங்கம் போல ஜொலிஜொலிக்கும் மனசுதானடா !
எங்கும் எதிலும் இருக்குதடா எங்க பேரு !
சிங்கம் போல நடையைத் தினமும் நீயும் பாரு !
முத்தமிழும் இருக்குதடா மொத்தமாக !
முழங்கிடுவோம் பறையிசைத்துச் சத்தமாக !
வைகை ஆத்து வெள்ளம் போல உள்ளம் தானடா !
மகிழ்ச்சியோடு வாழும் எங்க இல்லம் தானடா !
மலை இருக்கும் இடமெல்லாம் கலை இருக்குமே !
சினம் இருக்கும் இடத்திலும் குணம் இருக்குமே !
நட்புக்காகக் கொடுத்திடுவோம் உயிரைக் கூடத்தான் !
கூடச் சேர்ந்து கரம் பிடித்து நீயும் ஆடத்தான் !
மாதங்களால் அழகு பெறும் வீதிதானடா !
மனம் நிறையச் சொல்லுமே சேதிதானடா !
பட்டிமன்றம் பாட்டுமன்றம் நாங்க தானடா !
சிரிக்க வைக்கும் சினிமாவிலும் நாங்க தானடா !
தலைகளாலே நிறைந்திருக்கும் தமுக்கம் பாரு
தரணியிலே மதுர போல இருக்குதா ஊரு ?
மல்லிப் பூவின் வாசம் அது மதுரக்காரன் பாசம்
ஜிகர்தண்டா குடிடா ! பறக்குது மீன் கொடிடா !
மு.மகேந்திர பாபு வின் பாடல்.
உலகம் போற போக்கப் பாருங்க
பூமி நெலம கொஞ்சம் எடுத்துக் கூறுங்க
மண்ணும் மரமும் அழிஞ்சு போகுதே !
மனுசன் மனசு இப்போ கல்லாய் ஆகுதே !
வாங்குறது அஞ்சு ரூபா பொருளுதான்
மறக்காம வாங்குறோமே பாலித்தின் கவருதான்
காலை முதல் மாலை வரை தானுங்க
பாலித்தீன தூக்கிக்கிட்டு அலையுறோமே ஏனுங்க ?
துணிப்பையைத் தூக்குங்க துக்கம் இல்லங்க
நெகிழிப் பையை நெனச்சாலே தூக்கம் இல்லங்க
தினம் டீக்குடிக்கும் கப்பு தானுங்க
தூக்கி வீசிப்புட்டாத் தப்புத் தானுங்க !
அழகுப் பொருளப் போட்டுத்தான அலங்கரிக்கிறோம்
நம்மத் தினமும் அழகு பாக்குறோம்
நச்சுப் பொருளக் கொட்டி ஏனோ நாசம் பண்ணுறோம்
பூமித்தாயின் உடம்ப தினமும் மோசம் பண்துறோம்.
இன்பச் சுற்றுலா போவது நாமதானுங்க
எல்லா இடத்திலும் நச்சப் போட்டாத் தீமதானுங்க
மண்ணும் மரமும் கேட்பதெல்லாம் மழயத் தானுங்க
மனட்சாட்சிய விட்டுப்புட்டுப் பேசுறோமே விலயத் தானுங்க
பூமிப் பந்தில் மனுசன் மட்டும் உயிரு இல்லங்க
புல்லும் பூண்டும் அழிஞ்சு போனா மனுசன் இல்லங்க
வாழும் வரை வளமாத்தான் வாழ வேணுங்க
சுற்றுச் சூழல் சுகமா நம்ம ஆள வேணுங்க !
பாடல்
மு.மகேந்திர பாபுவின் பாடல்
வா நண்பா தோள் கொடு !
பசுமை காண மரம் நடு !
நட்பில் இணைந்து விண் தொடு !
நாளை உலகம் நமதென கைகொடு !
மதுரை மண்ணின் பெருமை சொல்லும் இளைஞர் படை
எங்கள் எழுச்சியின் முன் இருப்பதில்லை வேகத்தடை
ஏற்றம் காண மாற்றம் தருமே எங்கள் நடை
முயற்சி உண்டு பயிற்சி உண்டு வளர்ச்சிக்காகத்தானே !
விதை விதைப்போம் மரம் நடுவோம் எங்கள் கையாலே !
வெற்றி எனும் கனி பறிப்போம் எங்கள் கையாலே !
புதுமைக்குள்ளே புதைவதில்லை எங்கள் எண்ணம்
வளமை கண்டு வாழ்த்துப் பெறுவோம் இதுதான் திண்ணம் .
சாதனைகள் படைத்திடுவோம் ! சரித்திரத்தில் இடம் பிடிப்போம் !
வேதனைகள் துடைத்திடுவோம் ! வெற்றியினைத் தடம் பதிப்போம் !
காலம் எங்கள் கையில்தானே ! கலாமின் பெருமை செயலில்தானே !
காளையர் நாம் எழுந்து விட்டோம் ! கடமையினால் உயர்ந்து விட்டோம் !
மகிழ்ச்சியுடன் கரம் கொடுப்போம் ! கடைசி வரை தோள் கொடுப்போம் !
மதுரை மண்ணின் பெருமை சொல்வோம் ! மனங்களை நாம் தினம் வெல்வோம் !
கதவுகள்தான் திறந்திருக்கு ! கண்களுக்குள் சக்தி பிறந்திருக்கு !
இந்த நாளும் இனி எந்த நாளும் தமிழுக்காக எங்கள் உயிர் வாழும் !
பூமியில வாழும் சாமி ! - இசைப்பாடல்*
பூமியில வாழுகிற சாமி பாருங்க !
பொன் விளையும் பூமி எங்க கோவில் தானுங்க ! - விவசாயி
பூமியில வாழுகிற சாமி பாருங்க !
பொன் விளையும் பூமி எங்க கோவில் தானுங்க !
வரப்பச் சீவும் கைகள்தானே கறைபடாத கை
வயல் வெளியில் ஏரை நீயும் கொண்டு வந்து வை
ஆடும் மாடும் எங்களோட சொந்த பந்தம்
அனுதினமும் வயல் வெளியில் வேர்வ சிந்தும்
விதை நெல்லக் கொண்டு வந்து வெதச்சுப் போடுறோம் !
வீட்டுலதான் விசேசம்னா ஒன்னாக் கூடுறோம் !
மழத்தண்ணி எங்களத்தான் வாழ வைக்குதே !
மத்த மனுசங்கள நாங்க நாளும் வாழ வைக்கவே !
பருத்திப் பூவு பூத்துக் கெடக்கு செடியில் தானுங்க !
காய்ச்சதுமே காசாக மடியில் தானுங்க !
பொண்ணுங்களும் ஏர்க் கலப்ப ஓட்டும் பாருங்க !
பூவப்போல இருக்குமுங்க எங்க சோறுங்க !
வெண்டச்.செடியும் கத்தரியும் கண்ணப் பறிக்குதே !
காட்டுமல்லி வாசம் கொஞ்சம் நம்ம மறிக்குதே !
சோறு போடும் முதலாளி நாங்க தானுங்க !
வேற வேல பாக்கப் போனா சோறு ஏதுங்க ?
விவசாயி இல்லையினா நாடு ஏதுங்க ?
வயல் வெளியில் வீம்புக்குனு வீடு ஏனுங்க ?
விளை பொருள விலை கொடுத்து வாங்கிப் பாருங்க !
விவசாயி உயர்ந்திடுவான் நீங்க பாருங்க !
*பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
போதைக்கு அடிமையாகாதே ! (இசைப் பாடல் )
போதைக்கு அடிமையாகாதே ! -அண்ணே
நம்ம பொழப்பு ரொம்ப கெட்டுப் போகும் - குடி
போதைக்கு அடிமையாகாதே !
நண்பர் கூட்டம் கூடச் சேர போதை பழகுவாய் - கெட்ட
நண்பர் கூட்டம் கூடச் சேர போதை பழகுவாய்
குடும்பம் கெட்டுப் போனபின்னே குடி பாதை விலகுவாய் !
ஆரம்பத்தில் இனிக்கும் அந்த நாட்கள் தான் அண்ணே - உன்னை
அழி குழிக்குள் அமுக்கப் போகும் நஞ்சு தான் அண்ணே
கொண்டாட்டத்தை தொடக்கி வைக்கும் குடி தானுங்க - உன்னை
திண்டாட்டத்தில் முடித்து வைக்கும் எமன் பாருங்க .
ஆணும் பெண்ணும் குடிக்கிராக அயல் நாட்டுல -நீ
குடிச்சுப் புட்டு கொடுமை பண்ற ஓன் வீட்டுல
சிறுசு முதல் பெருசு வரை கிடக்குதையா டாஸ்மாக்குல
சீரழிஞ்சு போகுதையா நம் பண்பாட்டுல ! (போதைக்கு ......)
புள்ள குட்டி மறந்து போகும் இடம் தானுங்க - நீ
ஊத்திக் குடிக்கும் பார் அது பாருங்க
கவலைகள மறக்கப் போயி குடித்தாயடா - இன்னும்
கவலைகளை அதிகமாக தூக்கிகிட்டு சுமக்கிராயடா ! -குடிச்சதால
உழைச்ச காச ஊத்திக் குடிச்சு வீணடிக்கிற
உடம்பு ரொம்ப கெட்டுப் போயி சீரழியிற
மனைவி புள்ள சண்ட போட்டுச் சாகடிக்கிற - குடிப்பதால
மனைவி புள்ள சண்டைபோட்டுச் சாகடிக்கிற
தராதரம் தெரியாமப் பேசித்திரியிற - பொழுது விடிஞ்சு
உணரும்போது பும்பித் தவிக்கிற - எனவே போதைக்கு அடிமையாகாதே!
***************** **********************
மதுர மண்னணு மனத மயக்கும் பொண்ணு. கோலி கண்ணு கொஞ்சம் பேசு நின்னு. கோடைக்கேத்த இளநிப் பேச்சு ஓம் பேச்சு ஜாடை காட்டி இழுக்குதடி ஓம்பேச்சு
தமுக்கம் அரங்கம் போல திறந்திருக்கு ஏன் இதயம்.
எக்கோ பார்க் பூவப் போல பூத்திருக்கு ஓன் இதயம்.
பூமார்க்கட்டா ஆனதடி ஓன் தலதான் பூலோகம் வந்ததோ தங்கச் சிலதான்
வெள்ளையரின் பெயரைச் சொல்லும் ஏ.வி. பாலம்
உள்ளக் கொள்ளையனின் பேரச் சொல்லு நான் பாவம்
ஒன் கால்படவே தெளிந்ததடி வைகைத் தண்ணி
சலசலனு ஓட மறந்ததடி உன்ன எண்ணி
ஆரப்பாளையம் கோரிப்பாளையம் கிடுகிடுங்குது
நீ கோவப்பட்டுப் பேசும்போது நடுநடுங்குது. மாட்டுப் பொண்ணே கட்டிவாடி தாவணி ஒன்னு.
மலைச்சுப் போயி நிக்கட்டுமே மாட்டுத்தாவணி கண்ணு
வானம் பார்த்த பூமி இப்ப உன்னைப் பாக்குது
நீ வந்து போகும் போது மட்டும் சாரல் பொழியுது.
ஞானம் வந்து சேந்ததடி ஏன் மனசுல
காதல் பித்தனாக மாறிப்புட்டேன் இளவயசில
மல்லிப் பூவு சிவக்குதடி பொறாமை பட்டுத்தான்
அல்லிராணி அணைச்சுக்கடி பிஞ்சுக்கை தொட்டுத்தான்
உடுக்கைச் சத்தம் கேட்குதடி இதயத் துடிப்புல
. உன் உடம்புபட்ட வேகத்தில் உள்ளக் கொதிப்புல..
********************** *******************
காதல் கானக்குயிலே...
பச்சைக்கிளி பறந்து செல்ல
பாவிமனம் பிரிந்து செல்ல
தாவித்தான் வருவேனே செல்லம்மா
பாவி என்னை ஏத்துக்கடி கண்ணம்மா
கண்ணம்மா கண்ணழகி
கார்வண்ணக் குழலழகி
செந்துருக்கப் பொட்டழகி
சிவந்தமேனி இடையழகி
ஓம்பேச்சுலதான் மானே
ஏன் மூச்சுப் போச்சு தானே!
நாளும் ரொம்ப ஆகிப்போச்சு
காலும் ரொம்ப சோர்ந்துபோச்சு
நீ வண்டியில வந்தாக்கா
சுண்டி இழுப்பேன் தன்னால!
கானக்குயிலே வாடி
வானத்தில நாம் பறப்போம்!
பறப்போம் என்று சொல்லி
திறப்பேனே உன் மனக்கதவை
ஒரு கணம் திகைத்து நின்றால்
மறுகணமே தூக்கிச் செல்வேன்
வாடாத மல்லிகை மொட்டே வாடி
தளராத இன்பம் பல தாடி
காட்டுலதான் நீ நடந்தா
வீட்டுல இருந்து பறந்து வருவேன்
ஏட்டுல நான் உன்னை வரைஞ்சா
கோர்ட்டுலதான் நீ போடு
மருதாணி வச்சுக்கிட்டு
மாமன் மனசைப் பறிச்சுக்கிட்டு
இடுக்கிபோல வர்றாளே
உடும்புபிடி பிடிபிடிக்க
இனிமேலும் காத்திருக்க
தனிமேல நானிருக்க
என்னால முடியாது
தன்னால நீ வாடி
வாடியேன் வண்ணக்கொடியே
மச்சானுடைய எண்ணப்படியே
இதழ் பதிக்க உன் கன்னம் கொடு
இருந்திடத்தான் நெஞ்சைக்கொடு
உன்னை நானும் அடைவேனே
காதல் பரிசைப் படைப்பேனே!
***************** ***********************
இசைப்பாடல் - மு.மகேந்திர பாபு
ஜீன்ஸ் போட்ட மானு - ஓம்
பேச்சு எல்லாம் தேனு
உன்ன சுத்தி வந்தேன் நானு - நீ
கை நழுவும் மீனு
என் இதயமெனும் இணையதளம் நீதானே! - அதில்
சிக்னல்தான் இல்லையென்றால் தீதானே!
பேஸ்புக்கப் போல உன்னைத்தான பிரிக்க முடியல
நீ இல்லாம என்னோட இரவு விடியல...
டுவிட்டர் போல பறக்குதடி ஏன் மனசுதான்
நீ பார்க்கும் பார்வை தினம் தினமும் புதுதினுசுதான்
பாஸ்வேர்டா என்னை நீயும் சேத்துக்கோ
புது வேர்ல்டா உன்னை நீயும் மாத்திக்கோ
அப்லோடும் டவுன்லோடும் பண்ணும் போதிலே
அன்போடு என்னை நீ கொஞ்சும் போதிலே
மெமரிகார்டு ஃபுல்லாக ஆனதடி
குமரி உன்னால் உள்ளம் பறிபோனதடி
அன்பிரண்ட் பண்ணும்போது ஆடுது உயிரு - நீ
என்னை ஷேர் பண்ணா பாடுது மனசுதான்
மியூச்சல் ப்ரண்ட் எத்தனபேரு எனக்குத் தெரியல
மத்தவங்க சாட் பண்ணா பேசப்புடிக்கல
******************************* ************************
மஞ்சணத்திப் பூச்சரத்த - இசைப்பாடல் - மு.மகேந்திர பாபு
மஞ்சணத்திப் பூச்சரத்தைக் கொண்டையிலே வச்சுக்கிட்டு
நெஞ்சமெல்லாம் ஆட்டுவச்சு நித்திரையைக் கலைச்சுக்கிட்டு
நித்தம் நித்தம் கொல்லுறியே அக்கா மகளே!
என் சித்தமெல்லாம் உன் நினைவு சொல்லு கிளியே!
காடுமேடு கழனிவாசல் கண்ணில்படும் உன் நினைவு
காட்டுமல்லி காற்றில் வீசும் வாசம்போல உன் நினைவு
கம்மாக்கர அலையடிக்கும் தண்ணிபோல உன் நினைவு
தீயும் சுடும் கம்மங்கருது வாசம்போல உன் நினைவு
என்னைச் சுத்திச்சுத்தி வருகுது சொல்லு மயிலே!
என் கானக்குயிலே! காதல் புயலே!
களை எடுக்கப் போகையிலும்
கதிர் அறுக்கப் போகையிலும்
வச்ச கண்ணு வாங்காமப் பாத்துப்புட்டேன்
நடுச்சாமம் எல்லாம் உன் நினைவாய்
தலையணையாய் உன்னைக் கட்டிச் சேத்துக்கிட்டேன்
நான் சேத்துக்கிட்டேன்
மண்பானைக் கஞ்சியத்தான் அகப்பை கொண்டு கிண்டயில
மனசெல்லாம் உன் நினைப்பத் தேக்கிக்கிட்டேன்
மண்பான கீழ விழ கஞ்சியெல்லாம் சிரித்துவிட
மனசெங்கும் மத்தாப்பு வெளிச்சம் மின்ன
அக்காமக உன்னைத்தானே புடுச்சிக்கிட்டேன்
என் நினைவால புடுச்சிக்கிட்டேன்
ஊரெல்லாம் ஒன்னு கூடி கம்மாயில மீன்பிடிக்க
கெண்ட மீனு துள்ளி வந்து ஓன் கண்ணமட்டும் பாத்துவிழ
என்னைப்போல கண்ணிருக்கா
எனக்கு இனி கவலயில்ல
தன்னால விழுந்ததடி ஓன் வலையில ... கம்மா மீனு
தன்னால விழுந்ததடி ஓன் வலையில
தறி கெட்டுப் போனேனடி என் நிலையில
நானும் என் நிலையில
கண்ணடிச்ச காலம் போயி
கைபுடிக்கும் காலம் வந்தது அக்கா மகளே!
காலந்தோறும் சந்தோசமா பாத்திருப்பேன்
அக்கா மகளே! என் அக்கா மகளே!
0 Comments