பாபு - இசைப்பாடல்
மதங்கள் இன்று மனித்தையே தொலைக்குது
மனுசன் வளர்ச்சியிலே தினமும் அது உதைக்குது
இந்து முஸ்லீம் கிறிஸ்டின் என்று
இதயம் ஒன்றும் சொல்லல
துடிக்கும் இதயம் ஒன்றும் சொல்லல
கோயில் மசூதி சர்ச் என்று
எந்த விழியும் நோங்கல
காணும் எந்த விழியும் நோங்கல.
சிவனும் நபியும் இயேசும் என்றும்
பகைமைக்குத்தான் ஆகல - ஆனா
பாழாயப்போன மனுசன் மனசு பச்சோந்தியா மாறுதே!
மனுச வாழ்க்கை வரம்ப மீறுதே!
கீதையும் பைபிளும் குரானும் என்றும்
அன்பைத்தானே சொல்லுது
கீரியும் பாம்புமாய் மனுசன் மனசு
மதத்தை நாடி ஏன் செல்லுது
மதங்கள் உனக்குச் சோறுபோட்டு
மகிழ்ச்சியடைய வைக்குதா? - உன்னை
மகிழ்ச்சியடைய வைக்குதா?
கிழிஞ்சுபோன உனது நெஞ்சை
தலைநிமிர தைக்குதா?
மதம்தான் உனக்குப் பெரிது என்றால்
மனிதம் இங்கே நிலைக்குமா?
மானுட ஜென்மம் ஆண்டாண்டுதோறும்
மகிழ்ச்சியோடு தழைக்குமா?
உன்னோட செயல்கள் உன்னோட வாழ்வை
உறுதிப்படுத்தும் எழுந்திடு
பூணுலும் தாடியும் தொப்பியும் அங்கியும் தயக்கமின்றிக் கலைத்திடு (மதங்கள்)
மு.மகேந்திர பாபு - 02-11-1998 - திங்கள்
0 Comments