மகிழ்விக்க வந்த மனிதநேயரே வருக!
மகிழ்வின் பருவம்
மாணவப் பருவம்
மதிவெங்கடேஷ் மதுரையில்
மனிதத்தின் உருவம்.
உன் பாதம்
எங்கள் பள்ளியில்
படும்போதெல்லாம்
மகிழ்வின் கீதம்.
முதலில் தந்தாய்
விளையாட்டு உடை.
வெற்றிப் பதக்கம்
பெற்றது மாணவர்படை.
மின் விசிறியும் விளக்கும்
உன்பெயர் சொல்லும்.
கால ஓட்டத்தில்
மனங்களை வெல்லும்.
எல்லை கடந்தது
உனது இதயம்.
நமக்கோ இன்பச்
சூரியன் உதயம்.
அடிக்கடி உன் கை
அன்பளிப்புத் தர நீளும்.
அப்போதெல்லாம்
அன்பு மனம் வாழும்.
அண்ணனைச் சுற்றி
அன்பின் ஒளிவட்டம்.
நம்மை மகிழ்விப்பதே
அவரின் திட்டம்.
நம் வாசலுக்கு வந்த
வானத்து மின்னல் கீற்று.
மதிவெங்கடேஷ் எனும்
மூச்சுக் காற்று.
மகிழ்விக்க வந்த
மகத்தான மனிதன்.
மாணவர்களுக்கு உதவ
மண்ணில் உதித்த புனிதன்.
கர்ணனாய் வந்து
வழி நடத்துகிறாய்.
கரம் தந்து எங்கள்
கவலைகளைக் கடத்துகிறாய்.
நீ வரும் போதெல்லாம்
உதவியும் வருகிறது.
உள்ளம் உற்சாகத்தை
உடனே பெறுகிறது.
நீ விதைப்பதெல்லாம்
அன்பின் விதை.
அதில் எழுகிறது
வெற்றியின் கதை.
நீ தொட்டதெல்லாம்
அட்சய பாத்திரம்.
உதவுவது ஒன்றே
உன் மனதின் சூத்திரம்.
மாணவர் உண்ணும்போது
தட்டில் உன் நினைவு.
நாளை நாங்களும்
வள்ளல் என கனவு.
ஓடி வந்து செய்கிறாய்
உதவி எங்களைத் தேடி.
ஆடிப்பாடிச் சொல்கிறோம்
நன்றிகள் கோடி.
இதயத்தின் அறைகளில்
நிரம்பியே இருக்கிறது உதவி.
நாளை நாட்டை ஆள
உனைத்தேடிவரும் பதவி.
எதிர்பார்ப்பின்றிச்
செய்கிறது உன்மனம்.
எங்கோ விடிகிறது
மகிழ்வாய் இன்றைய தினம்.
உன் வரவால் பட்டுப்போன
செடியிலும் பச்சையம்.
நாளை விருட்சமாய்
நிற்கும் நிச்சயம்.
இளமனூரில் நீ உதிக்கும்போது
நாங்கள் சூரியகாந்தி.
உன் முகம் காண
காத்திருக்கிறோம் அன்பை ஏந்தி.
அழகர் வந்தால்
அது சித்திரைத் திருவிழா.
அண்ணனே! நீ வந்தால்
முத்திரைப் பெருவிழா.
உன்னிடம் மட்டும்தான்
பணம் கைகட்டி நிற்கிறது.
மனிதத்தை மாணவர் மனம்
உன்னிடம் கற்கிறது.
என்ன அதிசயம்?
உன்னுள் தாய்மையின் கருப்பை.
அதில் வைத்தான் இறைவன்
மனிதம் எனும் சிறப்பை.
விளம்பரம் தேடாத
வெற்றியின் நாயகனே!
குழந்தைச் சிரிப்பினும்
குற்றமிலாத் தூயவனே!
எங்கள் இளமனூர்க்கு
நீ வந்துகொண்டே இரு.
வசந்தக் காற்றைத்
தந்துகொண்டே இரு.
ஏன் தெரியுமா?
பாடநூல் தராத
பாசத்தை நேசத்தை
படிக்கட்டும் எங்கள் படிக்கட்டும்.
கலியுகக் கர்ணனே!
கார்வண்ணக் கண்ணனே!
மாணவர்களின் மன்னனே!
அன்பு அண்ணனே!
தமிழ் போல் வாழ்க!
தரணியை நீயே ஆள்க!
வாழ்த்தும் வணக்கமும்,
'நல்லாசிரியர்' மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், இளமனூர்.
பேச - 97861 41410.



0 Comments