சிறுவர் பாடல் - நன்றி.
உதவி செய்த நண்பருக்கு
உடனே நன்றி சொல்லனும்!
பெற்றுக் கொண்ட உதவியினை
பிறருக்கு நாளை செய்யனும்!
உற்ற நேரம் உதவுதலே
உலகில் சிறந்த பண்பாகும்!
அனைத்து உயிரையும் நேசித்தலே
ஆகச் சிறந்த அன்பாகும்!
சூழலினைத் தெரிந்த பின்பு
சும்மா இருக்க முடியாதே!
சும்மா இருந்து விட்டாலே
சுகமாய் நாளை விடியாதே!
கேட்காமலே உதவி செய்வது
வள்ளல் களின் குணமாகும்!
உதவி செய்யும் பொழுதெல்லாம்
உன்னத மான தினமாகும்!
நன்றி மறவா மனதுடன்
நாளும் நாமும் வாழ்ந்திடுவோம்!
உதவி செய்யும் நண்பர்களை
உவந்து நாமும் வாழ்த்திடுவோம்!
மு.மகேந்திர பாபு
0 Comments