சிறுவர் பாடல் - அவர்தான் அழ.வள்ளியப்பா
எளிய சொற்களால் எங்களை
என்றும் மகிழச் செய்தவராம்!
குட்டிச் சுட்டிக் குழந்தைகளுக்கு
லட்டுப் பாடல் தந்தவராம்!
மலரும் உள்ளம் நூல்தான்
வளரும் குழந்தைக்குத் தந்தவராம்!
மறைந்த பின்னும் இன்றும்தான்
மனதில் பாடலாய் வந்தவராம்!
கிழமைப் பாடல் படித்துத்தான்'
கிழமை தெரிந்து கொள்ளலாம்!
நாளும் பாடல் ஒன்றைத்தான்
நன்றாய்ப் பிறருக்குச் சொல்லலாம்!
'நல்ல நல்ல நூல்களை
நாடி நாமும் பயிலுவோம்'
என்று சொன்ன தாத்தாவிற்கு
என்ன பெயர் தெரியுமா?
அவர்தான் அழ வள்ளியப்பா!
அனைவர் மனமும் துள்ளுமப்பா!
பாடலைத் தினமும் கேளப்பா!
பண்பை வளர்க்கும் நாளப்பா!
மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், இளமனூர்.
0 Comments