முந்நூறு / முன்னூறு எது சரி? / greentamil.in

 முந்நூறு / முன்னூறு 



       வங்கிக் காசோலையில் 300 என எண்ணாலும் முந்நூறு என எழுத்தாலும் எழுத வேண்டும். முன்னூறு என்பது முன்னைய நூறு என வேறு பொருள்படும். மூன்று + நூறு = முந்நூறு ஆகும்.

        முன்னாள் அமைச்சர் என்றால் முன்பு அமைச்சராக இருந்தவர் என்று பொருள்படும். முந்நாள் அமைச்சர் என்றால் மூன்றுநாள் மட்டும் அமைச்சராக இருந்தவர் என்றாகிவிடும். இந்நாளில் இவ்வேற்றுமை அவசியம் தேவைப்படுகிறது.

           தன் + நலம் = தன்னலம். அது சுயநலம் தமிழன் மிகவும் தன்னலமுடையவன். தமிழர்கள் தந்நலம் மிக்கவர்கள். தம் + நலம் - தந்நலம். இது பன்மை வடிவம். ஆனாலும் தமிழர்கள் தன்னலமுடையவர்கள் என்று சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் உரியது தன்னலம். அதனால் தமிழரைப்போல் தாய்மொழியை வானளாவப் புகழ்பவர்களையும் உலகில் கண்டதில்லை; அவர்களைப் போல் 'தன்னலம்' மிக்கவர்களையும் உலகில் பார்த்ததில்லை எனலாம்.

Post a Comment

0 Comments