எது சரி?
வெந்நீரா ? வென்னீரா?
வெம்மையான நீர் வெந்நீர்தான். சிலர் சூடான வெந்நீர் கேட்பார்கள். அவர்களுக்குக் கொதிக்கிற வெந்நீர் ஊற்ற வேண்டும்.
தண்மை + நீர் = தண்ணீர்.
தண்மை - குளிர்ச்சி - தண்ணீர் - குளிர்ந்த நீர்.
நன்மை + நீர் = நன்னீர்
வெம்மை + நீர் = வெந்நீர்
இவை பண்புத் தொகைப் புணர்ச்சி எனப்படும்.
எனவே, வெந்நீர் என்றே எழுதுதல் வேண்டும்.
1 Comments
Marieswari
ReplyDelete