சிறுவர் பாடல் - விடுமுறைக் கொண்டாட்டம் - மு.மகேந்திர பாபு

 

          சிறுவர் பாடல்

விடுமுறைக் கொண்டாட்டம் 


பாட்டி வீட்டிற்குப் போகலாம்!

பாட்டுப் பாடி ஆடலாம்!

மாமா வீட்டிற்குப் போகலாம்!

மழையில் நனைந்து ஓடலாம்!


வரப்பில் நடந்து செல்லலாம்!

வயலில் நெல்லைப் பார்க்கலாம்!

அலை அடிக்கும் கண்மாயில்

ஆசையாய் நீந்தி மகிழலாம்!


பறவை காட்டில் பறப்பதைப்

பார்த்து நாமும் பறக்கலாம்!

அம்மா என்றே அழைத்திடும்

பசுவிடம் பாலும் கறக்கலாம்!


கம்மங் கூழும் குடிக்கலாம்!

காலையில் கதையும் படிக்கலாம்!

விருப்பம் போல மகிழவே

திருப்பம் தந்திடும் விடுமுறையே!


மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், 

இளமனூர், மதுரை.

97861 41410.

Post a Comment

0 Comments