தமிழ் ஹைக்கூ : மூன்றாவது உலக மாநாடு


               தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. கவிஞர் சகா தலைமை வகித்தார். இனிய நந்தவனம் இதழின் கௌரவ ஆலோசகர் சீனிவாசன், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், மகாகவி பாரதியாரின் பெயர்த்தி உமாபாரதி முன்னிலை வகித்தனர். கவிஞர் மூரா வரவேற்றார். ஹைக்கூ கவிதைகளின் முன்னோடி ஓவியக்கவிஞர் அமுதபாரதி, வெங்கடசுப்பிரமணியன், உமர்பாருக் வாழ்த்துரை வழங்கினார்கள். 


     ஹைக்கூ மாநாடு எதற்காக? என்ற தலைப்பில் நந்தவனம் சந்திரசேகரன் விளக்க உரையாற்றினார். மாநாட்டின் நோக்கவுரை குறித்து மாநாட்டு ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ் உரையாற்றினார். விழாவில் மாநாட்டுச் சிறப்பு மலரான ' தூண்டில் ' இதழை கவிஞர் அமுதபாரதி வெளியிட இலங்கையின் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.


     ஹைக்கூ வாசிப்பரங்கம் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.அயலகப் பயிலரங்கம் மற்றும் மாநாட்டில் ஹைக்கூ கவிஞர்களின் நூல்கள் , கட்டுரைகள் வெளியிடப்பட்டன. கவிஞர் மூரா எழுதிய 'ஜென்னிசைப் பறவை' , கவிஞர் மலர்மகள் எழுதிய ' முளைக்கும் கல்மரங்கள்' , கவிஞர் சகா எழுதிய ' ஒளியை மடிக்கும் நட்சத்திரங்கள்' , கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ' கொம்பு முளைத்த நிலா' , ' எனக்கு ஹைக்கூ பிடிக்காது' , கவிஞர் அய்யனார் ஈடாடியின் ' மடியேந்தும் நிலங்கள்' , கவிஞர் தமிழ்கனலின் ' முகில் ' உள்பட மொத்தம் 38 நூல்கள் வெளியிடப்பட்டன.


     இளமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் மு.மகேந்திர பாபு எழுதிய 'மகள் வரைந்த கோடுகள்' என்ற நூலை கவிஞர் அமுதபாரதி வெளியிட, கவிஞர் மு.முருகேஷ் பெற்றார். உடன் வேளாண்மை அலுவலர் அக்ரி ஆறுமுகம், இராணுவ அலுவலர் கஜேந்திரன், நந்தவனம் சந்திரசேகரன், இலக்கியப் புரவலர் ஹாசிம்உமர் , பாரதியின் பேத்தி உமாபாரதி உடன் இருந்தனர். 


     மாநாட்டு நிறைவுரையைப் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர்.தங்கம் மூர்த்தி நிகழ்த்தினார். கவிதைப்போட்டிகளில் வென்றவர்களுக்குப் பணமும், புத்தகங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. மாநாட்டுப் பொருளாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கவிஞர்கள் உமாபதி, பொன்விக்ரம், கம்பம் தூயவன், தமிழ்ராஜ், பசுமலை பாரதி, கவிதாகுமார், பாண்டிச்செல்வி செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments