சங்கம் வச்சு தமிழ் வளர்த்த மதுரதானடா - பாடல் - மு.மகேந்திர பாபு / SANGAM VACHU TAMIL VALARTHA MADURAI - SONG MAHENDRA BABU

 


சங்கம் வச்சு - பாடல் - மு.மகேந்திர பாபு.


சங்கம் வச்சுத் தமிழ் வளர்த்த மதுரதானடா - என்றும்

தங்கம் போல ஜொலிஜொலிக்கும் மனசுதானடா !

எங்கும் எதிலும் இருக்குதடா எங்க பேரு! - இங்க

சிங்கம்போல நடையைத் தினமும் நீயும் பாரு

முத்தமிழும் இருக்குதடா மொத்தமாக ! - நாங்க

முழங்கிடுவோம் பறையிசைத்துச் சத்தமாக !


வைகை ஆத்து வெள்ளம் போல உள்ளம்தான்டா ! - இது

மகிழ்ச்சியோடு வாழும் எங்க இல்லம் தான்டா !

மாதங்களால் அழகு பெறும் வீதிதான்டா - இங்கு

மனசு நிறையக் கொட்டிக் கிடக்கு சேதிதான்டா !

மலை இருக்கும் இடங்களெல்லாம் கலை இருக்குமே - இங்க

சினம் இருக்கும் மனங்களிடம் குணம் இருக்குமே !


நட்புக்காகக் கொடுத்திடுவோம் உயிரைக்கூட - எங்க 

கூடச்சேர்ந்து கரம் பிடித்து நீயும் ஆட !

ஆட்டம் என்றாலும் பாட்டம் என்றாலும்

மனசு விடிய விடியக் கூத்துதானடா  !

                                         -  சங்கம்


எங்க மண்ணும் மனசும் ஒன்னுதான்

நட்பும் கற்பும் ஒன்னுதான்

நாங்க அடிச்சிடுவோம் பாட்டாலே

பிடிச்சிருவோம் கூட்டாளி

போகுது பார் மலர்க்கொடி

இங்கு பறக்குது பார் மீன்கொடி

குடிக்கனுன்டா ஜிகர்தண்டா !

இங்க படிக்க வந்தா பவர்தான்டா !


பட்டிமன்றம் பாட்டுமன்றம் நாங்கதான்டா !

சிரிக்க வைக்கும் சினிமாவிலும் நாங்கதான்டா !

தலைகளாலே நிறைஞ்சிருக்கு தமுக்கம் பாரு 

இந்தத் தரணியில மதுர போல இருக்கா ஊரு ?

மதுரயின்னா மல்லிகைப் பூ வாசம் வீசும்

மதுரக்காரன் பாசம்னா நாடே பேசும்


ஜல்லிக்கட்டு காளைபோல துள்ளிக் குதிப்பான்

கபடியினு வந்துபுட்டா கில்லி அடிப்பான்

ஏடு மறைஞ்சாலும் வீடு மறைஞ்சாலும் 

உலகை ஆளும் தமிழன் நாங்க தானடா !


                    - சங்கம் வச்சு ...

Post a Comment

0 Comments