ஸ்மார்ட் மதுரைக்கு ஒரு வாழ்த்துப் பாடல்.

 


ஸ்மார்ட் மதுரைக்கு ஒரு வாழ்த்துப் பாடல்.

ஸ்மார்ட் மதுர புக்குதானுங்க
பாக்கும் போதே செம லுக்குதானுங்க
வண்ண வண்ண தாள்களாலே ஜொலிக்குது
எண்ண மெங்கும் மகிழ்ச்சியினை நிறைக்குது

மதுரைக்கு எத்தனையோ பெருமைதானே இருக்குது
ஸ்மார்ட் மதுர பெருமைய இன்னும் கொஞ்சம் பெருக்குது
மாதந்தோறும் மலருதுங்க ஒரு பூப்போல
மனசெங்கும் ஒளிருதுங்க மத்தாப்புப் பூப்போல

கலாநிதியின் கதை சொல்லும் காதலைத்தானே
ஜெயவள்ளியின் கட்டுரை சொல்லும் ஆற்றலைத்தானே
சந்தேகத்தை நீக்கி வைக்கும் சட்டம்தானே
சந்தோசத்தை அள்ளித்தரும் குட்டீஸ் படங்கள் ்தானே !

சிலுசிலுனு சிலிர்க்குதையா ரமணாவின் பேச்சு
அனுபவத்தை எடுத்துச் சொல்லும் உயிர் மூச்சு
வம்புகளை அளந்து வந்து தருதுங்க வலைப்பேச்சு
வாசகரின் வார்த்தைகளை வடிக்குதுங்க சார்போஸ்ட்

உலகம் முழுதும் இருக்குதுங்க தமிழனின் பாதம்
உள்ளம் வந்து தொட்டதுங்க மதுரை கீதம்
உலகம் முழுதும் கொண்டு சென்றது ஸ்மார்ட் மதுரை
உற்சாகம் பொங்குதுங்க துள்ளிக்கிட்டு நம்மமதுர

வசந்தத்தை  வாசலுக்கு கொண்டு வரும் புத்தகம்
வாசிப்பில் நேசிப்பை வளமாக்கும் புத்தகம்
இல்லத்தையும் உள்ளத்தையும் அலங்கரிக்கும் ஸ்மார்ட் மதுரை
எல்லோரின் கைகளிலும் தவழட்டுமே ஸ்மார்ட் மதுரை

பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு தமிழாசிரியர்

Post a Comment

0 Comments