உலகம் போற போக்கப் பாருங்க - இசைப் பாடல்

 

சுற்றுச் சூழல் காப்போம் !

பல்லவி

உலகம் போற போக்கப் பாருங்க
பூமி நெலம கொஞ்சம் எடுத்துக் கூறுங்க
மண்ணும் மரமும் அழிஞ்சு போகுதே
மனுசன் மனசு இப்போ கல்லாய் ஆகுதே !

சரணம்

வாங்குறது அஞ்சு ரூபா பொருளுதான்
மறக்காம வாங்குறோமே பாலித்தீன் கவருதான்
காலை முதல் மாலை வரை தானுங்க
பாலித்தீன தூக்கிக்கிட்டு அலையுறோமே ஏனுங்க ?

துணிப்பையைத் தூக்குங்க துக்கம் இல்லிங்க
நெகிழிப்பையை நினைச்சாலே தூக்கம் இல்லிங்க
தினம் டீக்குடிக்கும் கப்பு தானுங்க
தூக்கி வீசிப்புட்டாத் தப்புத் தானுங்க

அழகுப் பொருளப் போட்டுத்தான அலங்கரிக்கிறோம்
நம்ம தினமும் அழகு பாக்குறோம்
நச்சுப் பொருளக் கொட்டி ஏனோ நாசம் பண்ணுறோம்
பூமித்தாயின் உடம் தினமும் மோசம் பண்ணுறோம்

இன்பச் சுற்றுலா போவது நாமதானுங்க
எல்லா இடத்திலும் நச்சப் போட்டா தீமதானுங்க
மண்ணும் மரமும் கேட்பதெல்லாம் மழையைத் தானுங்க
மனச்சாட்சிய விட்டுட்டு பேசுறோமே விலையைத் தானுங்க

பூமிப் பந்தில் மனுசன் மட்டும்  உயிரு இல்லிங்க
புல்லும் பூண்டும் அழிஞ்சு போனா மனுசன் இல்லிங்க
வாழும்வரை வளமாத்தான் வாழ வேணுங்க
சுற்றுச் சூழல் சுகமா  நம்மை ஆளவேணுங்க !

Post a Comment

0 Comments