இலக்கிய மன்றத் தொடக்க விழா - இளமனூர்.

 



இலக்கிய மன்றத் தொடக்க விழா 


          இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா இன்று ( 14 - 07 -2023 ) நடைபெற்றது.விழாவிற்கு உதவித் தலைமையாசிரியர் சண்முகவேலு தலைமை வகிக்க , ஆசிரியை தேவி முன்னிலை வகித்தார். எட்டாம் வகுப்பு மாணவி ஓவியா வரவேற்றார். தமிழாசிரியர் மகேந்திர பாபு மன்றத்தின் நோக்கம் குறித்து அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராகப் பட்டிமன்றப் பேச்சாளர் திருநாவுக்கரசு ' இலக்கிய இன்பம் ' என்ற தலைப்பில் உரையாற்றினார். மன்றத் தொடக்க விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. அரசுப்பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கோபிகா  மற்றும் பதினோராம் வகுப்பில் தமிழ்ப்பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற வைஷ்ணவி , இராக்காயம்மாள் , வல்லரசி ஆகியோருக்குத் தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடற்கல்வி ஆசிரியர் முத்துராசா விழாவை ஒருங்கிணைத்தார்.ஒன்பதாம் வகுப்பு மாணவர் கார்த்தி நன்றி கூறினார்.


செய்தி - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர், இளமனூர்.

பேச - 97861 41410



Post a Comment

0 Comments