கவிப்பேரரசருக்கு வாழ்த்துப் பாடல் - மு.மகேந்திர பாபு

 


வாழ்த்துப் பாடல் - கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களுக்கு.

பல்லவி

வாழ்த்துகிறோம்  ...பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்
பூமாலை சூட்டி வாழ்த்துகிறோம்
பொன்மாலைப் பொழுதென வந்தவரை - தமிழ்ப்
பாமாலை சூட்டி வாழ்த்துகிறோம் !

சரணம் - 1

மதுர மண்ணின் மகன் தானே !
மல்லிகையாய் மணப்பவன் இவன்தானே !
இலக்கியத்தின் கண் தானே !
எழுச்சி பெற்றது நம் மண்தானே !
பாடலால் தாலாட்டும்  நாவலால் மகி்ழ்வூட்டும் உன்னோட எழுத்துகளால்  - உள்ளம்
நாளெல்லாம் மகிழுதையா !
இன்று நாடே உன்னைப் புகழுதையா !

சரணம் 2

வெற்றி மேல் வெற்றி பெறும்
எங்கள் வெற்றித் தமிழர் பேரவையே!
விருதுகள் உனைச் சூழும்
உன் எழுத்தெல்லாம் எமை ஆளும்
நீவாழும் நாளெல்லாம் நம்
தமிழ் வந்து மனம் ஆளும்
கள்ளிக்காட்டுக் காற்றும் இப்போ
துள்ளிக்கிட்டு போகுதையா
உன் பிறந்த நாள் எங்களுக்குச்
சிறந்தநாளாய் ஆனதையா !

சரணம் 3

பாரதிதான் உன் இராஜா
உனை உயர்த்தியதோ பாரதி இராஜா
தமிழுக்கு மரியாதை சூடுது உன்பாதை
கரம் கோர்த்தோம் ஒரு நாளில்
கவிஞர்களின் திருநாளில்
நீ கவிபாடும் போதெல்லாம்
தமிழ் புவியாடும் மகிழ்ச்சியிலே !
உன் முகம் பார்த்து வாழ்த்திடவே
ஊர் கூடி இங்கு வந்தோம் !
உள்ளமெல்லாம் வெள்ளமென துள்ளிடவே
கரவொலியால் வாழ்த்து தந்தோம்
தமிழெனவே வாழ்ந்திட வேண்டும்
இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் !

வாழ்த்துகளுடன் ,

மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments