வரவேற்புரை

 

வரவேற்புரை

வணக்கம் கூறி வரவேற்றலும் ,
இன்முகத்துடன்
உபசரித்தலும்
தமிழர்தம் பண்பாடு.
அதுவேதான்
எங்களின் கடப்பாடு.

உங்களின்
அன்பு வருகை.
எங்களுக்கு உவகை.

கருப்புக்கால் மைதானம்
நிரம்பியிருக்கிறது
மனிதத் தலைகளால் !
இன்னும்
சற்று நேரத்தில்
நீங்கள் மகிழ்வீர்கள்
எங்கள் மாணவர்களின் கலைகளால் !

அரை நூற்றாண்டைக்
கடந்த பள்ளி.
மாணவர்கள் வருகின்றனர்
என்றும் ஆனந்தமாய்த் துள்ளி !

இது
கல் விளையும் பூமி.
இந்தக் கல் விளையும்
பூமியில் விளைந்தது
பி.ஆர்.எனும் நவரத்தினக் கல்.

இந்தக் கல்லுக்குள் ஈரம்.
இந்த ஈரத்திற்குள் உண்டு
ஜல்லிக்கட்டு எனும் வீரம்.

மாட்டின் மீது மட்டுமல்ல.
நாட்டின் மீதும்
இவருக்கு நேசம்.
நாடென்பது
இன்றைய வகுப்பறைதானே !

காளைகள் மட்டுமல்ல
இளங்காளையர்களும்
இவரது ரசிகர்கள்.
ஈரமும் வீரமும் இவருக்கு
இருகண்கள்.

கடையேழு வள்ளல்கள் என
படித்திருக்கிறோம்.
பார்த்ததில்லை.
ஏழு வள்ளல்களின்
ஒட்டு மொத்த உருவம்தான்
ஐயா பி.ஆர். அவர்கள்.

மண்ணின் மைந்தரை
வருக ! வருக என வரவேற்கிறோம் !
பள்ளியின் சார்பாக
கரவொலி எழுப்பி ,
இருகரம் கூப்பி.

இவர் பசுமையின் காதலர்.
ஆசிரியர்களின் காவலர்.
சிறந்த அரசுப் பணிக்காக
டில்லி சென்று
வருதினை வென்றவர்.

விருது பெற்றபின்
இவர் பெறும்
முதல் நிகழ்ச்சி.
நாம் அனைவருக்கும்
மனம் நிறைந்த மகிழ்ச்சி.

தங்கள் வருகைக்குப் பின்
மதுரை கிழக்கின் உதயம்
இனிதே மலர்ந்து வருகிறது.
ஆசிரியர்களுக்கு
மன நிறைவினைத் தருகிறது.

சிறப்புரை நிகழ்த்த
வருகை தந்துள்ள
தொடக்கக் கல்வி அலுவலர்
முனைவர் திரு. ஜான்கென்னடி அலெக்சாண்டர் அவர்களை
வருக வருக என
வரவேற்கிறோம்.

வாழ்த்துரை வழங்க வந்துள்ள
கூடுதல் உதவி தொடக்கக்கல்வி
அலுவலர் திருமதி. அழகு மீனா அவர்களை வருக வருக என
வாஞ்சையோடு வரவேற்கிறோம்.

வாழ்த்துரை வழங்க வருகை தந்துள்ள
திருமங்கலம்
உதவி தொடக்க கல்வி அலுவலர்
திருமதி. பேபி அவர்களை வருக வருக
என வரவேற்கிறோம்.

மதுரை கிழக்கு வட்டார வளமைய
மேற்பார்வையாளர்
திருமதி.ஜெயந்தி அவர்களை வருக வருக
என வருவேற்கிறோம்.

எங்களது அன்பழைப்பை ஏற்று
வருகை தந்துள்ள
சக ஆசிரியப் பெருமக்களையும் ,
ஊர்ப் பொதுமக்களையும் ,
நிகழ்ச்சி தொகுப்பாளர்
திருமதி. முருகானந்த லட்சுமி அவர்களையும் ,
நன்றியுரை வழங்க உள்ள திருமதி.லதா
அவர்களையும் ,
மாணவச் செல்வங்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.

மணமக்களுக்கு
சீர் வழங்கும் வழக்கம் உண்டு.
இங்கே நம்பள்ளி மாணவர்கள்
வளம்பெற வழங்கப்படுகிறது
கல்விச்சீர்.

இது
ஊர் மக்களின் பங்களிப்பு.
ஓயாது உள்ளம் திறந்து
தருகின்ற ஒத்துழைப்பு.

மனதைத் தொடுகின்ற
உத்தமமான பெற்றோர்கள்.
மனம் திறந்து வாழ்த்துகளை
வழங்க உள்ள கற்றோர்கள்.

கருப்புக்கால் கிராமத்தின்
பொறுப்புள்ள
அனைத்துப் பெற்றோர்களுக்கும் ,
நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

மு.மகேந்திர பாபு ,
09 - 03 - 17.

Post a Comment

0 Comments