இலக்கியத்தில் இருதயம் - வெற்றித் தமிழர் பேரவைக்கூட்டம் ( 28 - 07 - 17 ) வரவேற்புரை - மு.மகேந்திர பாபு.

 


இலக்கியத்தில் இருதயம்

வெற்றித் தமிழர் பேரவைக்கூட்டம்
( 28 - 07 - 17 )

வரவேற்புரை - மு.மகேந்திர பாபு.

இலக்கிய ஆர்வலர்களுக்கான ஓரவை.
அது நமது வெற்றித் தமிழர் பேரவை.

இது கவிப்பேரரசு எனும்
இலக்கியத் தேனீயால்
கட்டப்பட்ட கூடு.
மனமே !
இப்பேரவைக்குச்
செவிக்குணவு உண்ண ஓடு.

இலக்கியம்தான் விழி.
வாழ்வைச்
செம்மைப்படுத்தும் நல்வழி.

சங்க காலம் முதல்
எங்க காலம் வரை
தங்கக் காலம்தான்
இலக்கியம் இருப்பதால் !

நமது சிறப்பு விருந்தினர்
அங்க நூல்களைப் படித்தவர்.
அதோடு மட்டுமல்ல ...
சங்க நூல்களையும் படித்தவர்.
இன்றைய உரையால்
நம் இதயத்திலும் ,
பேரவையிலும் நீங்கா இடம் பிடிப்பவர்.

மதுரையை ஆண்டார்
பாண்டியன் அன்று.
மருத்துவத்தை ஆள்கிறார்
ஐயா பாண்டியன் இன்று.
மருத்துவத்தின்
புகழ் ஏந்தி பாண்டியன் இன்று.

நாடி பிடித்துப் பார்ப்பவர்.
இன்று
இலக்கியத்தைத் தேடிப்பிடித்து
நம் இதயத்தில் களமாட வந்துள்ளார்.

உள்ளம் நன்றாக இருக்க
இதயத் துடிப்புச் சீராக இயங்க வேண்டும்.
இல்லம் நன்றாக இருக்க
இலக்கியம்
நம்மை இயக்க வேண்டும்.

மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்தவர்.
மனிதர்களின் மனங்களைத் தெரிந்தவர்.
இலக்கியத்தின்
இலக்கினை உணர்ந்தவர்.
நமக்கு உணர்த்த வருகிறார்.

பாம்சி என்ற நாலெழுத்து
மந்திரத்தின்
எந்திரம் இருதயம் இவர்.

பாம்சிக்கும்
எனக்கும் ஒரு பந்தம் உண்டு.
ஆம் !
எங்கள் வீட்டின் இரண்டாவது
தேவதை மலர்ந்தது அங்கேதான்.
அந்த மகிழ்வை
நினைவுபடுத்துகிறேன் இங்கேதான்.

இந்த நாள்
இனிய நாளானது தங்களால்
மருத்துவர் திரு.புகழேந்திப் பாண்டியன்
அவர்களை இருகரம் கூப்பி
நமது கரவொலியுடன் வருக வருக என
வரவேற்கிறது நமது வெற்றித்தமிழர் பேரவை.

இவர் வீடுகட்டும் பொறியாளர்.
நம் வெற்றித் தமிழர் பேரவையை
வீறுகொண்டு வழிநடத்தும் நெறியாளர்.

அறத்தின் வழியிலே
பொருள் ஈட்டி ,
இன்பம் கண்டு,
நமக்கு வீடுபேற்றை நல்கும்
ஈடு இணையற்ற அன்பர்.
வள்ளுவர் கண்ட வல்லவர்.
வாய்மை தவறாத நல்லவர்.

புத்தகங்களைப் பொக்கிசமாக
மதிப்பவர்.
வள்ளல் பெருந்தன்மையின் அடையாளமாய்
எங்கள் மனவானில் உதிப்பவர்.

உதவி எனக்கேட்டால்
காசோலையில் உடனே
முத்திரையைப் பதிப்பவர்.
படைப்பாளர்களைப்
பேச்சாளர்களைத் துதிப்பவர்.

வெற்றித் தமிழர் பேரவையின்
மதுரை மாவட்டத் தலைவர்
பொறியாளர் திரு.சுரேஷ் அவர்களை
வருக வருக என வரவேற்கிறோம்.

கல்வி நிலையங்களால்
மாணவர்களிடம்
பெற்றோர்களிடம்
அறிவுச் செல்வத்தை நிரப்பி ,
மதுரை மக்களின் மனங்களில்
மங்காத சந்திரனாய்
பவனிவரும் திரு.அபிநாத் சந்திரன்
அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.

இவர்
அருளுடையவர்.
பேரவையின்
பொருளுடையவர்.
வாசிப்பை உயிர்மூச்சென
நேசிக்கும் மாண்புடையவர்.

தங்கத்தின் தங்கம்.
அங்கமெலாம் தங்கமாக்கலாம்
என்றாலும் ,
உடலில் பொன்னகை எதற்கென
தன் உள்ளத்தில் புன்னகை வைத்து
நமக்கு வழிகாட்டும் ராசன் இவர்.

நட்பிற்கு உதாரணமாய் ,
நாடு போற்ற வாழ்வாங்கு வாழ்ந்துவரும்
ஐயா ஏ.ஆர்.டி.நாகராசன் அவர்களை
வருக வருக என வரவேற்கிறோம்.

இவர்
மரங்களின் காதலர்.
நல்மனங்களின் காவலர்.
தும்பைப்பூ உடையும் ,
உள்ளமும் அணிந்தவர்.
தம் மனதில் பட்டதை
அஞ்சாது உரைக்கத் துணிந்தவர்.

நேர்மையின் நண்பர்.
உழவன் உணவகத்தின் அன்பர்.
வேளாண்மை படித்ததால் என்னவோ
விவசாயிகளை என்றும் நேசிப்பவர்.
உதவிகளால் பூஜிப்பவர்.

நூறு முகங்களிலும்
நாங்கள் விரும்புவது
கருணையுள்ளம் கொண்ட
ஆறுமுகம்தான்.
அவரால் நம்பேரவைக்கு
என்றும் ஏறுமுகம்தான்.

மரங்களோடு
நம் மனங்களை
குளிரச்செய்ய வருகை தந்துள்ள
ஐயா ஆறுமுகம் அவர்களை
இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த
மதுரை மாநகரில்
வெற்றித் தமிழர் பேரவையிலும் ,
நகைச்சுவை மன்றத்திலும்
அங்கம் வகிக்கும் நல்லவர்.
செயலில் வல்லவர்.

அருள் ஒளி தந்தவர்
இராமலிங்க அடிகள் .
இருள் ஒழிய
மின்னொளி தருபவர்
நம் பாலராமலிங்கம் அவர்கள்.
அவர்களை பேரவையின் சார்பில்
வருக வருகவென வரவேற்கிறோம்.

வான வீதியில் வெண்சந்திரன்.
பள்ளியில்
மாணவர் வானில்
நம் தமிழ்ச்சந்திரன்.

தமிழால் இணைந்து
தரணியில் சிறந்து விளங்கும்
தமிழாசிரியர் சந்திரன் அவர்களை
வருக வருகவென வரவேற்கிறோம்.

வெற்றித் தமிழர் பேரவையின் மீதும்
இலக்கியத்தின் மீதும்
இருதயத்தின் மீதும்
பற்றுக்கொண்ட
அனைத்து உள்ளங்களையும்
வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில்
வருக வருக ! தொடர்ந்து
ஆதரவு தருக ! தருக ! எனக்கூறி
வரவேற்புரையை நிறைவு செய்கிறேன்
நன்றி வணக்கம்.

கவிதையாக்கம்.

மு.மகேந்திர பாபு.
தமிழாசிரியர், இளமனூர்.
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments