நன்னெறி ஆசிரியர் விருது - 2016 நன்றிக்கவிதை - மு.மகேந்திர பாபு

 


நன்னெறி ஆசிரியர் விருது - 2016

நன்றிக்கவிதை - மு.மகேந்திர பாபு

ஆண்டின் நிறைவோ
இரண்டாயிரத்துப் பதினாறு.
உங்களால் இன்று
ஆசிரியர்களுக்குக்
கிடைத்துள்ளது பெரும்பேறு.

எங்கள் வெற்றிக்கு
வழிகாட்டியவர்கள் ஆசிரியர்கள்
என்ற வார்த்தைகள்தான்
இன்றைய விழா அழைப்பிதழின் முகப்பு.

வார்த்தைகளைக் கண்டவுடன்
உள்ளுக்குள்ளே திளைப்பு.

இது வார்த்தையல்ல ...
வாழ்க்கை.
இதை உணர்ந்ததால்
உங்களுக்குக் கிட்டியது வாகை.

இருகை இணைந்து வழங்குகிறது
நன்னெறி ஆசிரியர் விருதுகளை !
ஒருகை பெனிட்&கோ
மறுகை மதுரை இலக்கிய மன்றம்.

இருகை இணைந்து வழங்குகிறது
நன்னெறி ஆசிரியர் விருதுகளை !
ஆசிரிய ஆலமரங்கள் உருவாக்கும்
இன்னும் நிறைய
மாணவ விழுதுகளை !

ஐயா பெனிட்கரன்.
வாத்தியார் வூட்டுப் புள்ள.
வசதிக்கு என்றும் கொற இல்ல.

வான் போல
வாச்சிருக்கு மனசு.
தானம் செய்யும்
முறையும் ரொம்பப் புதுசு.

நெல்லச் சீம
கலந்ததையா மதுர மண்ணுல.
அருட்கொடைதான்
நெறஞ்சிருக்கு ரெண்டு கண்ணுல.

வாத்தியார வாழ்த்துதையா
உங்க உள்ளம்தான்.
தலமொற தலமொறயா
செழிக்கவேணும் உங்க இல்லம்தான்.

மதுரையினா தோணுமே
எண்பெருங்குன்றம் !
மாணவரை மாண்புறச் செய்யுது
மதுரை இலக்கிய மன்றம்.!
மத்தாப்பூ சிரிப்புனா ஐயா மாடசாமி.
மயங்குதையா உங்க பேச்சக்கேட்டு
இந்தப் பூமி !

நவக்கிரகம் ஒன்பது.
இங்கு நன்னெறி ஆசிரியர் விருதால்
சிறப்புப்பெற்ற ஆசிரியர் எண்ணிக்கையும் ஒன்பது.

கடந்தாண்டு விருது பெற்றவர் மூவர்
இவ்வாண்டோ மூன்றின் மடங்காய் ஒன்பது நபர்கள்.

உங்கள் உள்ளம் பெரியது
என்பதை
எண்கள் சொல்லும்.
எங்களின் இல்லம்
மகிழ்வினில் துள்ளும்.

இலக்கியங்களில் இனி
புதிதாய்ப் பெயரை ஏற்றலாம்.
கொடையாளி
ஐயா பெனிட்கரன் எனப்போற்றலாம் !

நாங்கள் மரங்களைப் பாடுபவர்கள்.
முதன்முதலாக பெனிட்&கோ வையும் ,
மதுரை இலக்கிய மன்றத்தையும் பாடுகிறோம் !
மரம்போல் வாழ்வு வாழ
உங்களோடு கூடுகிறோம் !

ஆசிரியர்களால் விலகுகிறது
அக இருள்.
ஆனந்தத்தால் நிறைகிறது வீட்டில்
பெனிட்& கோ நிலைத்தின் பொருள்.

இது ...
பிடித்தை வாங்க பிடித்த இடம்.
தமிழகம் தாண்டியும்
தேசமெங்கும் நிறையட்டும்
உங்களின் தடம்.

அட்ச ரேகையும் ,
தீர்க்க ரேகையும் ஆசிரியர்கள்தானே !
ஆம் !
மாணவர் மனதில் உள்ள
அச்சத்தைத் தீர்க்கும்
அருமையான ரேகை
ஆசிரியர்களின் கரங்களில் மட்டுமே !

அந்தக்கரங்களை
வலுப்படுத்துகிறது
இந்தக்கரம்.
மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறது
எங்களின் சிரம்.

ஆசிரியர்களைப் போற்றும்
சமுதாயம் பெறுகிறது வெற்றி !
அன்பையும் , ஆசியையும்
இறுகப்பற்றி !

தாலாட்ட , சீராட்ட
நம்முடனே பெற்றோர்கள்.
பணிகளைப் பாராட்ட
ஐயா பெனிட்கரனும் , அவனிமாடசாமி
போன்ற சமுதாயத்தைக் கற்றோர்கள்.

வேந்தர் என்றாலே வழங்குபவர்தானே !
இங்கே
துணை வேந்தரின் பொற்கரங்களால்
விருதுகளைப் பெற்றோம் !
ஐயா திருமலை
தமிழ்ப்பெருமலை.
உங்கள் முன் நாங்கள் சிறுமலை.

மலைக்க வைக்கும் உங்கள் பேச்சு.
நகைச்சுவை நடனமாடும்
உங்கள் நாவில் !
நீங்கள் வந்து செல்லும்
இடமெல்லாம் கலைக்கோவில்.!

காக்கி உடைக்குள்
ஒரு கவிஞர்.
மணிமணியான தன் எண்ணங்களை
வண்ணங்களாக்கும் ஐயா மணிவண்ணன் அவர்கள்.

இங்கிலாந்திற்கு ஒரு பெர்னாட்சா.
அவரைப்போல்
மதுரை இலக்கிய மன்றத்திற்கும் ஒரு பெர்னாட்சா.

பாண்டவர்களின் காப்பாளன் பீமன்.
மதுரை இலக்கிய மன்றத்தின்
காப்பாளர் ஐயா சோமன்.

அழகழகான வார்த்தைகளால்
வாழ்த்துத்தந்த ஐயா அழகர்நாதன்.

உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும்
ஏற்று வளர்கிறோம் .
உங்கள் வாழ்த்துகளால் மகிழ்கிறோம் !

வாய்ப்பிற்கும் ,
வாழ்த்திற்கும் மிக்க நன்றி. !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் .
அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , இளமனூர்.
பேச - 97861 41410.

Post a Comment

0 Comments