யார்ரா அந்தப் பாட்டி ? சும்மா சும்மா நடந்து போய் டிவிய மறச்சிட்டுப் போகுது ?
டேய் , பேசாம வாயப் பொத்திக்கிட்டு இருடா.அவங்க இந்த வீட்டு ஓனரோட அம்மா.நீ சொன்னது தெரிஞ்சிச்சுனா , அடுத்த வாரம் ஞாயித்துக் கெழம படம் பாக்க வர முடியாது.
சாரிடா ! தெரியாமச் சொல்லிட்டேன்.கம்முனு இருந்திரேன்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்க ஊர்ல ஒரே ஒரு வூட்ல மட்டுந்தான் டி.வி.அதும் கருப்பு வெள்ளை.எங்க மாமா வீடு அது.வெள்ளிக் கிழம ஒலியும் ஒளியும் பாக்கவும் , ஞாயித்துக் கிழம படம் பார்க்கவும் ் என ஒரு கூட்டம் வீடு நிறைய அடைத்திருக்கும்.
இன்றுதான் எத்தனை எத்தனை தொலைக்காட்சி சேனல்கள் ? வெள்ளிக்கும் , ஞாயிறுக்கும் காத்துக் கெடந்த நாட்கள் சுகமான ஞாபகப் பெரு நாட்கள்.
மு.மகேந்திர பாபு.
0 Comments