காடு வயல் காப்போம்

 


காடு , வயல் காப்போம் - பாடல்  ( மு.மகேந்திர பாபு  ) 


காடு வயல் அதிகம் இருந்ததெல்லாம் அப்போ - அதில்

கட்டடமா மாறிப்போச்சு பாதி  இப்போ

சத்தான காய்கறிகள் கிடைச்சதெல்லாம் அப்போ - நாம

நஞ்சத்தானே சாப்புடுறோம் இப்போ 


மக்கள் தொகை பெருகப் பெருக குறைஞ்சதையா வயல்வெளி

செயற்கை உரம் போட்டதாலே இருக்கும் நிலமும் இப்பபலி

வாழவைக்கும் வயல்வெளியை வீழ வைக்கும் மனிதனே !

வாழ்க்கை எல்லாம் இனி நோய்கள் சூழும் என்ன செய்வாய் மனிதனே !


படிச்ச கூட்டம் ஊர விட்டு ஓடுது - அது

பக்குவமா நகரத்தில வேலயத்தான் தேடுது

அப்போ மாசந்தோறும் மூனு மழ பேஞ்சது

இப்போ மழயின்றி காடுகர காஞ்சது


உழவுமாடு கால்தடம்தான் வயலிலே - டிராக்டர்

வந்துவிட மாட்ட இப்ப காணல

ஏரு பூட்டி உழுத சனம் எங்கடா ? - அதன்

ஏக்கத்த இங்க தீர்த்து வைப்பதாரடா ?


பட்டம் போட்ட வயல்களையும் காணல

பட்டம் படிச்சவனையும் கிராமத்தில காணல

நாகரிகம் வளர வளர உணவு முறையும் மாறுது

இளமையில முதுமையாகி மண்ணுக்குள்ள போய்ச் சேருது


தாலிக்கும் வேலிக்கும் போராடும் மனித கூட்டமே !

வயல்வெளிய கூறுபோட்டு விற்பதுதான் தெரியலையோ ?

காடழித்து வீடாக்கும் மனித கூட்டமே !

மண்ணைவிட்டு எடுத்திடுவாய் பெரும் ஓட்டமே !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments