மழை


 

மிரட்டி வந்த மழையில்

விரட்டி விளையாட ,

உச்சி முதல் உள்ளங்கால்வரை

உணர்வு ஜில்லிட ,

உடை களைந்து,

ஊர் முழுவதும் அலைந்து ,

தெருவெங்கும் மழைநீர் சேமிப்பு

தொட்டியென காட்சிதர ,

ஓலைக் குடிசையின் 

ஓட்டை வழி

உள்வந்து உரையாடிய் மழைத்துளிகளின் நினைவுகளோடு

அப்படியேதான் இருக்கிறது

கிராமம்  எந்த மாற்றமுமின்றி ,

அடிக்கடி பெய்த

மழை ஒன்றைத் தவிர !


மு.மகேந்திர பாபு 


( புகைப்படம் - தோழர் ப.கவிதா குமார் )

Post a Comment

0 Comments