தலைக்கவசம் போட்டுப் போங்கண்ணே ! - பாடல் ( மு.மகேந்திர பாபு )
தலைக்கவசம் போட்டுப் போங்கண்ணே ! - போன
வேல முடிஞ்சு சந்தோசமா திரும்பி வாங்கண்ணே !
வில மதிக்க முடியாதது நம்ம உயிருதானண்ணே ! - ஒரு
நிலயின்றி விபத்திலதான் விடை பெறலாமண்ணே ?
பட்டப் படிப்பு படிக்கப் போற தம்பி - உன்
குடும்பமே இருக்குதையா உன் வரவ நம்பி
சட்டம் போட்டு நம்ம தலய காக்கணுமா ? - ஒரு
காவல்காரர் நம்ம நிறுத்தி விபரம் கேக்கணுமா ?
குலுங்கி குலுங்கிப் போக வைக்குது நம்ம ரோடு - அதில
குதூகலமா பயணம் செய்வது பெரும்பாடு
சாலை விதிய நாம மதிப்பதே இல்லை - தினம்
இப்படியே போனா நமக்குத்தானே பெரும் தொல்லை.
ஓட்ட உடைசல் சாலைகளை மேம்படுத்துங்க
மேம்பாலங்கள் போட்டு நெருக்கடிய குறைக்கப் பாருங்க
காலை மாலை கூட்டம் போகுதையா நத்தையாகத்தான் !
காணும்போது தெரியுது சர்க்கஸ் வித்தையாகத்தான் !
வாகனங்கள் எண்ணிக்கை கூடிப் போச்சண்ணே !
வரம்புமீறி வண்டி ஓட்ட உடம்ப மண் மூடிப் போச்சண்ணே !
டாட்டா சொல்லி அனுப்பறது மேல போறதுக்கா ?
போட்டோ போட்டு பொட்டு வச்சு தனிமரமா ஆறதுக்கா ?
தலைக்கவசம் போட்டுப் போனா பிழைச்சுக்கலாம்
குடும்பத்தோடு சந்தாசமா நாமும் நிலைச்சுக்கலாம்
தரமான கவசத்தை வாங்கிப் போட்டுப் போங்க
வரமான வாழ்க்கைய நாளும் வாழ்நது வாங்க !
மு.மகேந்திர பாபு.
0 Comments