தண்ணீரைத் தேடி
ஒரு பயணம்
கால் தவறினால்
நிச்சயம் மரணம்.
கிணறெங்கும் வெறுமை
எங்கள்
வாழ்க்கையோ வறுமை.
பல மைல்கள் நடந்து,
சில ஊர்கள் கடந்து
உச்சி வெயில்ல வந்தோம்
உடம்பெல்லாம் வெந்தோம்.
தரையில
காத்திருக்கு குடம்.
தண்ணி இல்லாம
கிணறு
பிடிக்குது அடம்.
சீர் வரிசையா
வந்த பானை
வரிசையாத்தான் காத்திருக்கு .
வானம் பாத்து
வாய் பிளந்து பாத்திருக்கு.
ஆங்காங்கே
அடிக்கக் கிடைக்குது தண்ணி.
குடிக்கக் கிடைக்கலையே தண்ணி ?
எங்க
வாழ்க்கையே பள்ளம்தான்.
அதில்
வரவேண்டும் வெள்ளம்தான்.
அப்பதான்
துள்ளும் உள்ளம்தான்.
மு.மகேந்திர பாபு.
0 Comments