நம்பிக்கை (ஒலிபரப்பு -நெல்லை வானொலி )

 


நம்பிக்கை (ஒலிபரப்பு -நெல்லை வானொலி )
@ அருகுகளின்
ஆதிக்கத்தில்
நிலம் எஞ்செவனே என்று
கிடக்கும் .
@ '' மழைய நம்பியெல்லாம்
இப்ப விவசாயம் பண்ண முடியாதுல ...
சொந்த கிணறு இருக்கிறவனுக்குத்தான்
விவசாயம் லாயக்கு ''
திண்ணையில் அமர்ந்திருக்கும்
பெரியவர்களின் பேச்சு இது .
@ '' பேசாம வேலிய விதச்சுப் போட்டா
நல்ல துட்டுப்பா ''
பதில் வரும் உடனுக்குடன் .
@ காட்டுல போடுற காச வச்சு
கவலை இல்லாம
காலாட்டி சாப்பிடலாம் வீட்ல ....
இப்படி சிலரின் பேச்சுக்கள் .
@ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில்
அப்பா மட்டும் தினமும்
வயலுக்கும் காட்டிற்கும் சென்று ,
கலப்பை பிடித்து
உழவு செய்வார்
அக்காவின் திருமணத்தை
இந்த வருஷ மகசூலில்
முடித்து விட வேண்டுமென்று !
@ மு.மகேந்திர பாபு # ( நன்றி - அ.இ.வானொலி -நெல்லை )

Post a Comment

0 Comments