நீ வீரனாச்சே !

 


நீ வீரனாச்சே !

----------------


மாணவ நண்பர்களோடு விளையாடி , காலில் சிறு காயத்துடன் , முக வாட்டத்தோடு வந்தான் ஒன்பதாம் வகுப்பு மாணவன்.

அய்யா  கீழே விழுந்திட்டேன்  , மருந்து போடணும் எனச்சொல்லும் போது கண்கலங்கி விட்டான்.


ஒன்னுமில்லடா ! ஒரே நாள்ல சரியாப் போகும்.நீ வீரனாச்சே ! நீயே கண்கலங்கலாமா ? என்றேன் மருந்திட்ட படி.


அவனுக்குள் புத்துணர்வு வந்துவிட்டது.அய்யா நான் விளையாடப் போகிறேன் என்றபடியே துள்ளிக் கொண்டு சென்றான் ஒரு கன்றுக் குட்டியாக. !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments