வெக்கை

 

வெக்கை


மின்விசிறியும்,

ஏ.சி.யும் இயங்கியும்

வெப்பம் தாளாமல் 

துவண்டு கொண்டிருக்க ,


சாணியால் மொழுகப்பட்ட

முற்றத்தை

சில்லாடை விளக்குமாறினால் கூட்டி,

கோரப்பாயை விரித்து,

பழைய துணிமூட்டை

தலையணையில் தலைசாய்த்து


காலருகே நாயும் ,

தலையருகே ஆட்டுக்குட்டியும்,

வயிரருகே பூனையும் என


சொந்த பந்தங்களுடன்

படுத்த சில நிமிடங்களில்

இயற்கை காற்றின் தழுவலில் தூங்கிப் போனார் அப்பா

கவலைகளின்றி !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments