பிறந்த.நாளில் மரம்

 


பிறந்தநாளில் இனி மரக்கன்றுகள் நடுவோம் ! ஆசையாசையாய் தன் பிறந்த நாளை வண்ண உடைகளில்  , இனிப்புகளைக் கொடுத்து கொண்டாடி மகிழ்வதை வழக்கமாகக்  கொண்டிருந்த எங்கள் பள்ளி மாணவர்களிடம் , பிறந்த நாளன்று மரக்கன்றுகளை உங்கள் பெயர் சொல்லும்படி நடுங்கள் என்றேன். இன்று 12 ஆம் வகுப்பு மாணவி தன் பிறந்த நாளிற்காக இரண்டு வேப்பங்கன்றுகளை வழங்கி மகிழ்ந்தாள். கன்றுகளைப் பெறுகிறார் எங்கள் பள்ளியின் உ.த.ஆசிரியர் திரு.சண்முகவேலு அவர்கள்.


மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.


மு.மகேந்திர பாபு.


பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்.

Post a Comment

0 Comments