கை காய்க்குமா ?

 

கை காய்க்குமா ?


உள்ளங்கையைத் தடவிக் கொண்டே கேட்டாள் மகள். ஏன்பா உங்க கையில  விரலுக்கு அடியில கல்லு மாதிரி இருக்கு ?


ஓ ... அதுவா ? கை காய்ச்சுப் போச்சுப் பாப்பா.


ஏம்பா , செடி , மரம்தான காய்க்கும் ? கை எப்டி காய்க்கும் ?


அது வந்து பாப்பா , அப்பா பத்து , இருவது வருசத்துக்கு முன்னாடி கடப்பாறை கம்பி , மண்வெட்டி , சம்மட்டி , களக்கொத்தி , உழவுனு எல்லா வேலயும் ஊர்ல இருக்கும் போது செஞ்சனா , அதான் கை இப்டி கல்லு மாதிரி இருக்குபா.


ஓ ... அப்டியா ? என் செல்ல அப்பா என்றபடியே கையில் முத்தம் பதிக்க , காய்ச்சுப் போன என்உள்ளங்கை பூப்போல மாறியது.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments