ஜீன்ஸ் போட்ட மானு

 


மரத்தைப் பத்தியும் ,  மனிதநேயத்தைப் பத்தியும் பாட்டெழுதிட்டிங்க.காதலைப் பத்தி ஒரு பாட்டெழுதுங்க என்றார் எங்கள் பள்ளியின் இசையாசிரியரும் , மேடைப்பாடகரும் , கவிஞருமான சண்முகவேல் அவர்கள்.இந்தப் பாடல்  ' மரமும் மனிதமும் ' இசைத்தகட்டிலுள்ள நிறைவுப் பாடல்.


பாடியவர்  - சண்முகவேல்

பாடல்  - மு.மகேந்திர பாபு

இசை   - மாயா சுரேஷ்.


பாடல்  - 


 பல்லவி        ்


ஜீன்ஸ் போட்ட மானு

ஓம் பேச்சு எல்லாம் தேனு

உன்ன சுத்தி வந்தேன் நானு

நீ கைநழுவும் மீனு


சரணம்


என் இதயமெனும் இணையதளம்  நீதானே

அதில் சிக்னல்தான் இல்லையென்றால் நான் தீதானே

பேஸ்புக்கைப் போல உன்னைத்தானே பிரிக்க முடியல

நீ இல்லாம என்னோட இரவு விடியல


டுவிட்டர் போல பறக்குதடி என் மனசுதான்

நீ பார்க்கும் பார்வை தினம்தினமும் புதுசுதான்

பாஸ்வேர்டா என்னை நீயும் மாத்திக்கோஈ

புதுவேர்ல்டா என்னே நீயும் சேத்துக்கோ


அப்லோடும் டவுன்லோடும் பண்ணும் போதிலே

அன்போடு என்னை நீ கொஞ்சும் போதிலே

மெமரி கார்டு புல்லாக ஆனதடி

குமரி உன்னால் உள்ளம் பறிபோனதடி


அன்பிரண்ட்டு பண்ணும் போது ஆடுது உயிரு

என்னை நீ ஷேர் பண்ணா பாடுது மனசு

மியூச்சல் ப்ரண்ட் எத்தன பேரு எனக்குத் தெரியல

மத்தவங்க சாட் பண்ணா பேசப் புடிக்கல 


( ஜீன்ஸ்  போட்ட ... )


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments