சண்டை

 


சண்டை


இந்தாரும் ... மாமா ... பேச்ச நிப்பாட்டிக்கோரும்.தேவையில்லாம வார்த்தய விடக்கூடாது , சொல்லிப்புட்டேன்.


நேத்து பிறந்த பய நீ. என்னய பேச்ச நிப்பாட்டச் சொல்லுறியாக்கும். கொடுமடா சாமி.


ஆமா ... நா நேத்துப் பொறந்தேன். தொர முந்தா நேத்துப் பிறந்தாரு. போரும்யா வேலயப் பாத்துக்கிட்டு .


ஏலேய் ... காத்தக்கட்டி விட்டோம்னு வச்சுக்க ... ஓன் சவ்வு கிழிஞ்சு போகும்.


நீரு காத்துல அடிக்கிற வரக்கி , ஏன் கையி புளியங்கா புடுங்குமாக்கும். ஓம் டங்குவார அத்துப்புட மாட்டானாக்கும்.


ஏம்பா ... இப்டி சின்னப்பய கூட செலவ இழுத்துக்கிட்ருக்க.


நல்லா கேளு பெரியா. மாப்ள பீடி கொடுனு கேட்டாரு. நா இல்ல மாமா னு சொன்னேன். உடனே பொத்திக்கிட்டுப் போக வேண்டியதானே ! ஒத்தப் பீடிக்கு வழியில்ல ... நீயெல்லாம் என்னடா எளவட்டம்றாரு. அததான் நானு கேக்கேன். ஒத்தப் பீடிக்கு வக்கில்லாத நீரு என்ன பெரிய மனுசன் ? 


எலேய் ... சிறுக்கிவிள்ள ...


ஏய் ., என்ன கூறு ஒனக்கு ?  இப்டி பொசுக்குனு கோபப்பட்டு கையநீ்ட்டுற.? 


விடுல அவன .ஒரு கை பாக்குதேன். 


சரி சரி ., போங்கபா ...


யோவ் என்ன பெரிய மனுசன்யா நீ ? அவன் எளந்தாரி . ஓங்கி ஒரு போடு போட்டானா நீ போயிருவ. இது தேவயா ?


அடே ., அதுக்குத்தான்டா ஒன்ன விலக்கிவிட வச்சிருக்கேன்.


ஆமா நீ கொழுப்பெடுத்து வாயவிடுவ. கடசியில சண்டய வெலக்கி விடறவன் அடிவாங்கிச் சாகவா .? நல்லாருக்குபா ஒங்க நாயம் ?!


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments