மரம்

 மகனும் மகளும்

மணமாகிச் சென்றபின்னர்

இனி என்னோடும்

இம்மண்ணோடும்

இருக்கப் போவது 

நீ மட்டும்தான் மரமே !

என்னுடலில் இணைந்திராத

மூன்றாவது கரமே !

உன் வளர்ச்சி

என் வளர்ச்சி .

மனங்களை விட

மரங்களே சிறந்தது என்பதை

உணர்ந்தேன் நான் முதுமையில் !


மு.மகேந்திர பாபு


படம்  - Thambirasu Thambimarimuthu  நண்பருக்கு நன்றி.

Post a Comment

0 Comments