மு. மகேந்திர பாபு ஹைக்கூ கவிதைகள் 1

 

மு. மகேந்திர பாபு ஹைக்கூ கவிதைகள் 

காலம் மாறி விட்டது
கதைத் தாத்தாக்கள் இல்லை
கணிப்பொறி முன் சிறுவன் .
நெடுஞ் சாலை விபத்து
அவரவர் வேளையில் ஈடுபாடு
இறந்தது மனிதம் .

வீடுகள் நெருக்கமாய்
உறவுகள் தூரமாய்
நகர வாழ்க்கை .
மக்கள் தொகைப் பெருக்கம்
மாநகராட்சி எல்லை விரிந்தது
சுருங்கியது மனித நேயம் .

மனிதனுக்கு நலம் வேண்டி
மாலையுடன் நிறுத்தப் பட்டிருக்கிறது
பலி ஆடு.
மிக விரைவாய் செல்கிறது பேருந்து
ஓட்டுநர்க் கருகில்
கல்லூரி மாணவிகள் .

முதல் விமானப் பயணம்
அனுபவித்து செல்ல முடியவில்லை
அப்பாவின் மரணச் செய்தி .

சாதிய மாநாடு
பாதுகாப்புடன் செல்கிறது
காவல் துறை வாகனம்.
இரு சாதிகளுக்கிடையே கலவரம் .
யாருக்கு ஆதரவு தருவது ?
கலப்பு மணத் தம்பதியினரின் மகன்.

அமைச்சர் பதவி
அடிமனதில் பயம் .
எந்த மத்தியச் சிறையோ ?
நெடுந் தொலைவு பயணம்
விரக்தியில் மீனின்றி மீனவன் .
தள்ளாடும் படகோடு வாழ்க்கை .

கதவிடுக்கில் சிக்கிக் கொண்டது பல்லி
வால் துண்டாகி துள்ளியது.
வலியில் மனசு .
@ மாமா , சித்தப்பா உறவுகள் இல்லை
தனிமையில் தவிக்கும் குழந்தை .
நாமிருவர் நமக்கொருவர் .
@ நகைக் கடை , துணிக்கடையில்
பேரம் இல்லை.
பேசுகிறான் காலணிக் கலைஞனிடம் .
@ மணிக்கொருமுறை மின்நிறுத்தம்
இரு மடங்கு எகிறியது
மின்கட்டணம் .
@ காலாண்டு விடுமுறையில்
வயலில் களையெடுத்த நினைவுகள் .
இன்று கட்டிடக் கலை .
மு.மகேந்திர பாபு .
பர பரப்பில் வீடு .
அவரவர் வேளையில் ஈடுபாடு .
வந்து விட்டது மின்சாரம் .
திடீர் தெய்வ வழிபாடு
உன்னைத்தான் மார்க்காய் நம்பியிருக்கிறேன் .
தேர்வு மாணவன் .

திங்கள் தோறும் குறை தீர் கூட்டம்
மனுக்களோடு குவிந்தனர் மக்கள் .
குறையவில்லை குறை .
நதி நீர் பங்கீடு
இரு மாநிலப் பிரச்சனை
அமைதியாய் ஓடுகிறது நதி .

சுமை சுமந்து
சோகம் சுமந்து
சுகம் காக்கிறாள் தாய்.

விட்டு விட்டுப் பெய்யும் கனமழை மழைநீரை சேமிக்கத் தொடங்கிவிட்டன சாலைகள். மு.மகேந்திர பாபு.

இறந்த பின்பும் மறையவில்லை
சாதிய வழக்கம்
மயானத்திலும் தனித்தனி .
@ மதுவும் , மாமிசமும்
தற்கால ஒத்திவைப்பு .
அய்யப்பனுக்கு மாலை.
மு.மகேந்திர பாபு .
அரசு திட்டத்திற்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டது பணம்
மகிழ்ச்சியில் அரசியல் வாதி .
விலங்குகளை வதைக்கதீர்கள் .
போர்க்குரல் எழுப்பும் ஆர்வலர்கள் .
கைவண்டி தள்ளும் தொழிலாளி

வரலாறு காணாத விலைவுயர்வு
கூட்டம் குறையவில்லை .
நகைக்கடை
தள்ளாடி நடக்கும் தாய்
ஆறுதலாய் அழைத்து வரும் மகள் .
கையில் முதியோர் வுதவித் தொகை .

மக்கள் பெருக்கம்
வாகனப் பெருக்கம்
அதே சாலை .
வருத்தத் தோடு நிற்கின்றன
வகுப்பறை கட்டிடங்கள்
மே மாத விடுமுறை .




























































































Post a Comment

0 Comments