காலம் போற்றும் கலாம் ! - கலாம் நினைவு நாள் சிறப்புப் பதிவு / A.P.J.ABDUL KALAM

 

காலம் போற்றும் கலாம்

                  27 .07 .2023


தென்கோடித் தமிழகத்தில் ஊற்றெடுத்த தேனருவி, நாடெங்கும் சிந்திய சிந்தனைச் சிதறலால் பொழிவுபெற்று மிளிர்ந்து,தலைநிமிர்ந்தது இந்தியா.ஆம் இந்தியத் தாயின் எளிய மகனான டாக்டர் .ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் பிறந்ததோ ஏழ்மையானாலும் தமது எண்ணத் தூய்மையால் பாரில் உயர்ந்து நின்றார்.அறிவியலாளராக, பிரதமரின் அறிவியல் ஆலோசகராக, குடியரசு தலைவராக உயர்ந்து,சிறந்த கலாம் நாட்டை நல்வழிப்படுத்த முயன்று முயன்று  தன் வாழ்நாள் முழுதும் உழைத்து தன்னை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

     இந்தியா பல குடியரசுத் தலைவர்களைக் கண்டபோதும் நாட்டின் பதினோறாம் குடியரசுத் தலைவரான கலாம் என்னும் கற்பகத்தரு இந்திய இளைஞர்கள் நடுவில் ஓர் இளந்தென்றலாய்ச் சுழன்று ஏற்படுத்திய உற்சாகத்தின் தாக்கம் மற்றவர்களில் இருந்து மாறுபட்ட குடியரசுத் தலைவராக, இளைஞர்களின் பாதையாக, ஞானமாக, ஒளிவீசும் தீபமாக ஒப்புமையில்லாத் தலைவனாக சிறந்து விளங்கினார்.

   இந்திய மாணவர்களின் கதாநாயகனாக ஒளிர்ந்த கலாம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நிகழ்த்திய உரையாடல்கள்  , உயரக் கிடைத்த ஊன்றுகோலாக உன்னதம் பெற்றவை.அந்த உரையாடல் ஒரு குடியரசுத் தலைவர் உரையாடலின் எல்லையைத் தகர்த்து மிக நெருக்கமான, இனக்கத்தை ஏற்படுத்தி இலக்கை நோக்கி அழைத்தது. 

       2015- ஆம் ஆண்டு ஜுலை 27- நாள் மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடை 

யே உரையாற்றி,உரமேற்றிக் கொண்டிருக்கையில் மயங்கி விழுந்து மண்ணுலகம் விடுத்து விண்ணுலகம் சென்றார்.


    இதனைத் தொடர்ந்து இராமேஸ்வரம் பேக்கரும்பில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 - ஆம் ஆண்டு ஜுலை 30 - ஆம் நாள் நல்லடக்கம் செய்யப் 

பட்டார்.உழைப்பின் சிகரம்,ஓய்வறியா உழைப்பு வங்கக் கடல் ஓரம் மென்அலைகள் 

தாலாட்ட அமைதிகொள்கிறது.


இறப்பிற்குப் பின் வழங்கப்பட்ட சிறப்புகள்;


  தமிழ் நாட்டில் 2015 - ம் ஆண்டு அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15- ம் நாளை , இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்தநாள் சிறப்பிக்கப் படுகின்றது.


* ஆந்திரப் பிரதேசம் கலாமின் புகழை அகிலம் முழுதும் பரப்பும் 

விதமாக 21- ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல்கலாம் அவர்கள் என்று புகழாரம் சூட்டி

மகிழ்ந்தது.


* புதுதில்லியில் உள்ள அவுங்க சீப் சாலைக்கு ஏ.பி.ஜே .அப்துல் 

கலாம் சாலை எனப் பெயரிட்டு 

மகிழ்ந்து ஆணையிட்டது புதுதி 

ல்லி மாநகராட்சி.


* உத்திரப்பிரதேச மாநிலமோ, அதன் மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் 

கலாம் பெயரைச் சூட்டி பெருமைப் 

படுத்தியது.


    எதிர்காலத்தில் தமது தாய்நாடு 

வல்லரசாக ஓளிர வேண்டி இந்தி

ய அணு ஆயுத திட்டத்திற்கு தன்

னையும்,தனது பணியையும் அர்ப்

பணித்து மகிழ்ந்தார்.அவருடைய

இந்தியா 2020 என்ற நூலில் ,இந்

தியா அறிவியலில் வல்லரசு நாடாகவும் ,வளர்ந்த நாடாகவும்

2020- ஆம் ஆண்டிற்குள் மாறுவத ற்கான வரை திட்டத்தை வகுத்துத் 

தந்தார். அவருடைய இத்தகைய 

செயல் பல பாராட்டுதலைப் பெற்றது. அவருடைய நூல்களின் 

மொழி பெயர்ப்பு பதிப்புகளுக்கு 

தென் கொரிய மக்கள் பெரும் வரவேற்பை நல்கி பாராட்டியது 

பெருமைக்குரியது.அளவில்லா

பெருமைக்குரிய அத்தகைய மாமனிதராம் கலாம் ஐயா அவர்களை இவ்வுலகம் என்றும்

நினைவில் கொள்ளும்.அவர் நினைவைப் போற்றுவது நமது கடமையும், பெருமையும் ஆகும்.

கலாமைப் போற்றுவோம்.!

கல்வியை வெல்வோம்!

Post a Comment

0 Comments