தமிழ் மன்றம்
இலக்கிய மன்றத் தொடக்க விழா
தோப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று ( 27 - 06 - 2023 ) இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை லிங்கேஸ்வரி தலைமை வகிக்க , ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். தமிழாசிரியை சுமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் மகேந்திர பாபு கலந்து கொண்டு உரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன . மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் பசுமைப் படையின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் டொயோட்டா நிறுவனத்தின் மேலாளர் சேது மற்றும் கார்த்திகேயன் கலந்து கொண்டனர். தமிழாசிரியை பாக்கியசீலி நன்றி கூறினார்.
0 Comments