அம்மா -
கவிதை ம.சஹானா , எட்டாம் வகுப்பு.
அம்மா -
மூன்றெழுத்து மந்திரம்.
நாள்தோறும்
இரவும் பகலுமாய்
உழைக்கும் எந்திரம்.
அம்மா -
அளவில்லா அன்பைப்
பொழியும் உறவு.
நம் வாழ்வில்
என்றும் இல்லை பிரிவு.
பத்து மாதம்
தவம் இருந்து
பெற்று எடுத்தாள் என்னை.
தன்னைப் பற்றிக்
கொஞ்சம்கூடக் கவலைப்படாத பெண் அன்னை.
கருவறையிலிருந்து பிறந்து
கல்லறைக்குச் செல்லும்வரை
ஈடில்லாப் பாசத்தைத்
தரும் உறவு அம்மா.
என்னை வளர்த்த தாய்மை.
உன் பாசத்தில்
எப்போதும் நேர்மை.
பாடங்களைக்
கற்றுக்கொண்டேன் வகுப்பறையில்.
தினமும்
சுவையான உணவு
உற்பத்தி ஆகிறது
உன் சமையலறையில்.
நான் தூங்கும் வரை தாலாட்டி
நான் வளர்வதற்குச் சோறூட்டி
என்னைச் சுத்தம் செய்ய நீராட்டி
நான் வளர நீயே வழிகாட்டி.
என்றும் உன்னையே நேசிப்பேன்.
உன் அளவில்லா
பாசத்தைச் சுவாசிப்பேன்.
ம.சஹானா.
0 Comments