10 - ஆம் வகுப்பு - தமிழ்
முதல் இடைப் பருவத் தேர்வு - 2022
மதுரை மாவட்டம் - விடைக்குறிப்புகள்
காலம் : 1.30 மணி மதிப்பெண்கள் : 50
பகுதி -I
அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் எழுதவும். 7X 1 = 7
1 ) பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர்-------
அ) தாமோதரனார்
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ ) வரதராசனார்
விடை : இ ) இளங்குமரனார்
2 ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலகமாநாடு நடத்திய முதல் நாடு ------
அ) சிங்கப்பூர் ஆ) மலேசியா
இ அமெரிக்கா ஈ ) லண்டன்
விடை : ஆ ) மலேசியா
3 ) சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப் பெற்றவர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார்
இ ) கவிமணி ஈ ) வைரமுத்து
விடை : ஆ ) பாரதியார்
4 ) உறுதுயர் இலக்கணக் குறிப்புத் தருக.
அ) பண்புத்தொகை
ஆ) வேற்றுமைத்தொகை
இ ) அன்மொழித்தொகை
ஈ ) வினைத்தொகை
விடை : ஈ ) வினைத்தொகை
பின்வரும் வரும் பாடலைப் படித்து 5, 6, 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்.
நும்இல் போல நில்லாது புக்கு
கிழவிர் போலக் கேளாது கெழீஇ
சேட்புலம்பு அகல இளிய கூற
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேலையொடு
கரூஉக்கண் கிறடிப் பொம்மல் பெறுகுவீர்
5 ) இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
அ) தமிழ்விடு தூது
ஆ) காசிக்காண்டம்
இ ) மலைபடுகடாம்
ஈ) முல்லைப் பாட்டு
விடை : இ ) மலைபடுகடாம்
6 ) கெழீஇ --------- இலக்கணக் குறிப்பத் தருக.
அ) செய்யுளிசை அளபெடை
ஆ ) சொல்லிசை அளபெடை
இ) இன்னிசை அளபெடை
விடை : ஆ ) சொல்லிசை அளபெடை
7 ) பொம்மல் - பொருள் கூறுக.
அ ) சோறு ஆ ) சுற்றம்
இ ) பள்ளம் ஈ ) கூத்தர்
விடை :அ ) சோறு
பகுதி - II ( பிரிவு - 1 ) 2 X 2 = 4
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 12 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
8 ) பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
* அரும்பு
* போது
* மலர்
* வீ
* செம்மல்
9 ) விடைக்கு ஏற்ற வினா அமைக்க.
அ) பாட்டுக்கு ஒரு புலவன் என்று பாரதியாரைப் பாராட்டியவர் கவிமணி.
வினா
பாட்டுக்கு ஒரு புலவன் என்று பாரதியாரைப் பாராட்டியவர் யார் ?
ஆ) இருத்தலும் இருத்த நிமித்தமும் உரிப்பொருள் எனப்படும்.
வினா
உரிப்பொருள் என்றால் என்ன ?
10 ) வசனகவிதை குறிப்பு வரைக.
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது.
11 ) ' பல்லார்' எனத் தொடங்கும் திருக்குறள் எழுதுக.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பிரிவு - 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அ) மலை - மாலை
மலை ஏற மாலை நேரம் சிறந்தது.
ஆ) வளி - வாளி
வளி மண்டலத்தில் வாளி போல் மேகம் திரண்டிருந்தது.
13 ) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
அ) கீரிபாம்பு - உம்மைத்தொகை
வீட்டில் நானும் என் அண்ணனும் அடிக்கடி கீரியும் பாம்புமாக இருப்போம்.
ஆ) முத்துப்பல் - உவமைத்தொகை
முத்துப்பல் தெரிய விருந்தினர்களை வரவேற்றார் உறவினர்.
14 ) கலைச் சொற்கள் தருக.
அ ) Folk Literature - நாட்டுப்புற இலக்கியம்
ஆ ) Storm - புயல்
15. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
மலைந்து = மலை + த் + ( ந் ) + த் + உ
மலை - பகுதி
த் - சந்தி
' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்த கால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி.
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக. வினா எண். 18 க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 3 x 3 = 9
16 ) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் 'வாழையிலை விருந்து விழா'வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்றனர் . முருங்கைக்காய் சாம்பார், வேப்பம்பூ ரசம், மோர்க்குழம்பு தினைப்பாயாசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.
அ) மினசோட்டா தமிழ்ச்சங்கம் எங்குள்ளது?
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமெரிக்காவில் உள்ளது.
ஆ) மினசோட்டா தமிழ்ச்சங்கம் எவ்விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது?
வாழை இலை விருந்து விழாவை.
இ தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள் யாவை?
முருங்கைக்காய் சாம்பார், வேப்பம்பூ ரசம், மோர்க்குழம்பு தினைப்பாயாசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.
(அல்லது)
சோலைக்காற்றும், மின்சாரக்காற்றும் பேசிக்கொல்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.
17 ) அடிபிறழாமல் எழுதுக.
அன்னைமொழியே எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்தினாரின் பாடல்.
அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே !
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !
தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே !
இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே ! நற்கணக்கே !
மன்னுஞ் சிலம்பே ! மணிமே கலைவடிவே !
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !
(அல்லது)
விருந்தினராக ஒருவன் வந்து எதிரின் என்று தொடங்கும் காசிக்காண்டம் பாடல்.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே .
18 ) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
இக்குறளில் பயின்று வரும் அணி : உவமையணி
அணி விளக்கம் :
ஒரு செய்யுளில் உவமான - உவமேயங்களை ஒப்புமைப்படுத்திக் கூறும்போது இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணியாகும்.
உவமை : வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்தல்
உவமேயம் : அரசன் தன் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மக்களிடம் வரி விதித்தல் .
உவம உருபு : போலும் - போல என்ற உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளது.
அணி பயின்ற விதம் :
ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு மக்களிடம் வரிவிதிப்பது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாகும் என்று உவம உருபு ( போன்ற ) வெளிப்படையாக வந்துள்ளதால் உவமையணி பயின்று வந்துள்ளது.
(அல்லது)
கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு
இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
19 ) தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை எழுதுக.
20. உணவுவிடுதியொன்றில், வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுடன் உணவுபாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
21 ) இன்சொற்களைப் பேசுவதனால் விளையும் நன்மைகள் ஐந்தினை எழுதுக.
22. காட்சியினைக் கண்டு கவினுற எழுதுக.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.
23. நயம் பாராட்டுக.
"கத்து கடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்" - காளமேகப்புலவர்.
முன்னுரை :
சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகப்புலவர். மேகம் மழை பொழிவதைப்போலக் கவிதை மழை பொழிந்தவர். அவருடைய பாடல் நயங்களைக் காண்போம்.
திரண்ட கருத்து :
ஒலிக்கின்ற கடலில் சூழப்பட்ட நாகைக் காத்தான் சத்திரத்தில் சூரியன் மறையும் பொழுதில் அரிசி வரும். அதனைக் குத்தி உலையில் இட்டுச் சோறு பொங்கி முடிக்கும் போது ஊரடங்கி உறங்கும் இரவாகிவிடும். அந்தச் சோற்றை ஓர் அகப்பை எடுத்து உண்ண இலையில் இடும்போது காலை அதிகாலை விடிவெள்ளி உதிக்கும் என்று சித்திரம் ஊரில் நிலவும் வறுமையின் அவலத்தைக் கூறுகிறார்.
ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட நாகைக் காத்தானின் சத்திரத்தில் உலகில் வேறெங்குமே அரிசி இல்லாமல் அஸ்தமிக்கும் வேளையிலும் இங்கு அரிசி மூட்டை மூட்டையாய் வரும். அதைக் குத்திப் பக்குவமாய் அடுப்பிலேற்றி உலையில் இடுவதைக் கண்டதுமே மக்களின் பசி அடங்கி விடும். சோறாக்கிய பின்பு ஓர் அகப்பை அன்னத்தை எடுத்து இலையில் இட்டதுமே அதன் வெண்மை நிறம் கண்டு நாணி. விடிவெள்ளி எழுந்து வரும் என்று சத்திரம் ஊரின் பெருமை கூறுவதாகவும் இருபொருள்படுகிறது.
தொடை நயம்:
எதுகைத் தொடை :
செய்யுளின் அடியிலோ சீரிலோ முதலெழுத்து
அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து
ஒன்றுபோல வருவது எதுகையாகும்
எ.கா.
கத்துகடல்
அத்தமிக்கும்
குத்தி
உலையிலிட
இலையிலிட
மோனைத்தொடை
செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.
எ.கா.
கத்து - கடல்
அத்தமிக்கும்
அரிசி
அகப்பை
அன்னம்
இயைபுத்தொடை :
செய்யுளின் இறுதிச்சீரோ , அசையோ , எழுத்தோ ஒன்றி வருவது இயைபு ஆகும்.
எ.கா :
உலையிலிட
இலையிலிட
வரும்
எழும்
முரண்தொடை :
எதிர்ச்சொற்கள் பாடலில் இடம் பெறுவதால் முரண் தொடை வந்துள்ளது.
எ.கா.
அத்தமிக்கும் X வெள்ளி எழும்
அணி நயம்:
சத்திரத்தின் வறுமையையும் செழிப்பையும் இருபொருள்பட பாடியுள்ளதால் இதில் ' 'இரட்டுற மொழிதல் ' அல்லது சிலேடை அணி பயின்றுள்ளது.
********************* ********************
24. காற்று மாசினைத் தடுக்க நீங்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளை எழுதுக.
25. புயலிலே ஒரு தோணிகதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும்,ஒலிக்குறிப்புச் சொற்களும், புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.
26 ) சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
சான்றோர் வளர்த்த தமிழ்
“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி”
என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த இலக்கிய வளம் மிக்க மொழி. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி. அதுதனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருந்த மொழி.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்” எனப் போற்றிப் புகழப்படுகின்ற தமிழ்மொழி உலகெங்கும் பரவியுள்ளது. இலக்கியங்களும் இலக்கணங்களும் பெருகி இருந்தமையால், தமிழ்மொழி திருந்திய மொழியாகத் திருத்தம் செய்யப்பட்ட மொழியாக ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்று விளங்குகிறது. பண்டைத் தமிழை அறிந்து கொள்ள தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் உதவுகின்றன. இடைக்காலத் தமிழை அறிந்துகொள்ள பக்தி இலக்கியங்கள் உதவுகின்றன. இவ்விலக்கியங்கள் மக்களின் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்துகின்றன. ஆதலால் இவை மக்கள் இலக்கியம் என்றே வழங்கப்படுகிறது.
'ஏடு காத்த ஏந்தல்' என்ற சிறப்பிற்குரிய தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் இல்லையெனில் தமிழ்இலக்கியங்களை எவரும் அறிந்திருக்க இயலாது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, காப்பியங்கள் என அனைத்தையும் அச்சிட்டுத் தம் பதிப்புப் பணியினால் தமிழுக்கு அழகூட்டியுள்ளார்.
சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரைப் பரிதிமாற்கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர் தமிழ்மொழியை உயர்தனிச்செம்மொழி என்று முதன்முதலாக நிலைநாட்டிய பெருமைக்குரியவர்.
மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் உருவாக்கி தமிழை வளர்த்தவர்.
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments