TNPSC - GROUP 4 தேர்வில் வெற்றி - வினாக்களும் விடைகளும் - மாதிரி ஆன்லைன் தேர்வு - பகுதி 1 / TNPSC - GROUP IV - QUESTION & ANSWER - ONLINE TEST - PART - 1

 

GREEN TAMIL.IN இணைய தளம் வழங்கும்

TNPSC - GROUP - IV தேர்வில் வெற்றி !

மாதிரி தேர்வு வினாக்களும் விடைகளும்.

***************     ************     ************

TNPSC - GROUP 4 எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும். வெற்றி உங்களுக்கே ! நமது GREEN TAMIL - YOU TUBE சேனல் மூலம் போட்டித்தேர்வு எழுதும் நண்பர்களுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் காட்சிப் பதிவாக வெளியிட்டு வெற்றிக்கு துணை செய்து வருகிறோம். IAS தேர்வு எழுதும் நண்பர்களுக்கும் பாடப்பதிவுகள் வெளியிட்டுள்ளோம்.

                  தற்போது TNPSC - GROUP IV எழுதும் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று மாதிரி வினாக்கள் விடைகளுடன் தினமும் ஆன்லைன் தேர்வாக நடைபெறும். TNPSC பாடப்பகுதிகளும் அவ்வப்போது pdf ஆக அனுப்பப்படும். ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகள்.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

    *************     **************   ***********      

1) மதுரைக்காஞ்சியில் மதுரையைப் பற்றிச் சிறப்பிக்கப்படும் அடிகளின் எண்ணிக்கை

அ) 782

ஆ) 301

இ ) 353

ஈ ) 354

விடை : ஈ ) 354

2 ) " புலனழுக்கற்ற அந்தணாளன்'   எனப்பராட்டப் படுபவர்

அ) ஓதலாந்தையார்

ஆ) நக்கீரர்

இ) பரணர்

ஈ) கபிலர்

விடை : ஈ ) கபிலர்

3 ) " ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே "

எனும் பாடலடிகள் இடம்பெற்ற நூல்

அ) குறுந்தொகை

ஆ) புறநானூறு

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

விடை : ஆ ) புறநானூறு

4 ) " இம்மை மாறி மறுமை ஆயினும் நீயா

கியர்என் கணவன் " என்ற வரிகள்   இடம்பெற்ற நூல்

அ) புறநானூறு

ஆ) குறுந்தொகை

இ) அகநானூறு

ஈ) கலித்தொகை

விடை : ஆ ) குறுந்தொகை

5 ) சிறுபஞ்சமூலத்தைக் குறிக்கும் வேர்கள்

அ ) கண்டங்கத்திரி, கத்திரி, வெண்டை, சிறுமல்லி , பெருமல்லி

ஆ) கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, நெருஞ்சி , சிறுமல்லி , பெருமல்லி 

இ) ஆடுதோடா, நெருஞ்சி, ஆவாரம், மஞ்சணத்தி , சிறுமல்லி

ஈ) கண்டங்கத்திரி புடலை, புன்னை, அகத்தி, பிரண்டை 

விடை : ஆ ) கண்டங்கத்திரி , சிறுவழுதுணை , நெருஞ்சி , சிறுமல்லி , பெருமல்லி

6 ) " யார் அறிவார் நல்லாள்

பிறக்கும் குடி " என்ற பாடலடி இடம்பெற்ற நூல்

அ) நாலடியார்

ஆ) இன்னா நாற்பது

இ) நான்மணிக்கடிகை

ஈ ) கார்நாற்பது

விடை : இ ) நான்மணிக்கடிகை

7 ) பெருங்காப்பிய இலக்கணம் பொருந்திய நூலாக இருந்தும் சிறுகாப்பியத்தில் இடம்பெற்ற நூல்

அ) நீலகேசி

ஆ) குண்டலகேசி

இ) நாக்குமாரகாவியம்

ஈ ) சூளாமணி

விடை : ஈ ) சூளாமணி

8 ) சமூக சீர்திருத்தக் காப்பியமாக   விளங்குவது

அ) சீவகசிந்தாமணி

ஆ) சிலப்பதிகாரம்

இ) மணிமேகலை

ஈ) குண்டலகேசி

விடை : இ ) மணிமேகலை

9 ) ஐஞ்சிறுகாப்பியம் என்ற வழக்கினை   ஏற்படுத்தியவர்

அ) தண்டி

ஆ) சி.வை.தாமோதரம் பிள்ளை

இ) மு.வரதராசனார்

ஈ ) அடியார்க்கு நல்லார்

விடை : ஆ ) சி.வை.தாமோதரம் பிள்ளை

10 ) " உண்டி கொடுத்தோர் உயிர்

கொடுத்தோரே " என மணிமேகலைக்குச் சொன்னது யார் ?

அ) அறவண அடிகள்

ஆ) காயசண்டிகை

இ) ஆதிரை

ஈ) தீவதிலகை

விடை : ஈ ) தீவதிலகை

11) சைவத்திருமுறைகளைத் தொகுத்தவர் யார் ?

அ) சதாசிவப்பண்டாரத்தார்

ஆ) முதலாம் ஆதித்த்தன்

இ ) நம்பியாண்டார் நம்பி

ஈ) நாதமுனி

விடை : இ ) நம்பியாண்டார் நம்பி

12) முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் யார் ?

அ) வாகீசர்

ஆ) வன்தொண்டர்

இ) திராவிடசிசு

ஈ ) அருள்வாசகர்

விடை : அ ) வாகீசர்

13) சரியான கூற்றை ஆராய்க. ( செயங்கொண்டார் )

I ) செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்

II ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பரணிக்கோர் செயங்கொண்டார் எனப் புகழ்ந்துள்ளார்.

III) முதலாம் குலோத்துங்க சோழனின்   அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்

IV ) தென்தமிழ் தெய்வப்பரணி என   புகழேந்திப் புலவர் புகழ்ந்துள்ளார்.

அ) 1, II, III சரி

ஆ) 1, II, IV சரி

இ) அனைத்தும் சரி

ஈ ) I, II  சரி

விடை : அ ) I , II , III சரி.

14 ) திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய நூல்

அ) மீனாட்சிகுறம்

ஆ) தமிழரசி குறவஞ்சி

இ) திருக்குற்றாலக்குறவஞ்சி

ஈ ) பெத்தலகேம் குறவஞ்சி

விடை : இ ) திருக்குற்றாலக்குறவஞ்சி

15) வேதநாயக சாஸ்திரி அவர்கள் எழுதிய நூல்

அ) மீனாட்சி குறம்

ஆ) தமிழரசி குறவஞ்சி

இ ) திருக்குற்றாலக்குறவஞ்சி

ஈ) பெத்தலகேம் குறவஞ்சி

விடை : ஈ ) பெத்தலகேம் குறவஞ்சி

16 ) வரதநஞ்சையப்ப பிள்ளை எழுதிய குறவஞ்சி நூல்

அ) மீனாட்சி குறம்

ஆ) தமிழரசி குறவஞ்சி

இ) திருக்குற்றாலக் குறவஞ்சி

ஈ) பெத்தலகேம் குறவஞ்சி

விடை : ஆ ) தமிழரசி குறவஞ்சி

17 ) குமரகுருபரர் எழுதிய நூல்

அ) மீனாட்சி குறம்

ஆ) தமிழரசி குறவஞ்சி

இ) திருக்குற்றாலக் குறவஞ்சி

ஈ) பெத்தலகேம் குறவஞ்சி

விடை : அ ) மீனாட்சி குறம்

18 ) கீழ்க்கண்டவற்றில் எது முதல் கலம்பகம்

அ) காசிக்கலம்பகம்

ஆ) திருவாரூர்க்கலம்பகம்

இ) மதுரைக் கலம்பகம்

ஈ) நந்திக்கலம்பகம்

விடை : ஈ ) நந்திக்கலம்பகம்

19 ) களவழி நாற்பது என்ற நூலின் ஆசிரியர்

அ) மூன்றுறையரையனார்

ஆ) பொய்கையார்

இ) புல்லங்காடனார்

ஈ) கண்ணன் கூத்தனார்

விடை : ஆ ) பொய்கையார்

20 ) பழமொழி நானூறு என்ற நூலின்   ஆசிரியர்

அ) மூன்றுறையரையனார்

ஆ) பொய்கையார்

இ) புல்லங்காடனார்

ஈ) கண்ணன் கூத்தனார்


விடை : அ ) மூன்றுறையரையனார்

Post a Comment

0 Comments