சர்வதேச செவிலியர் தினம் - மே 12 / வெள்ளை உடைத்தெய்வங்கள் / GREENTAMIL.IN - WORLD NURSE DAY - MAY 2022

 

சர்வதேச செவிலியர் தினம்

            12 • 05 • 2022


தாய் காணும் முன் குழந்தையை 

தன் கரம் ஏந்தி....

சுவாசக் காற்றை யூட்டிய 

நிகரில்லா தாயானவள்!

புன்சிரிப்பை மருந்தாக்கி 

புண் கொடுமையின் துயர் துடைக்கும்

புவனத்தின் புனித அன்னையானவள்!

நோயில் துவண்டவரின் 

துருவ நட்சத்திரம் !

அருவெறுப்பையும் ஆதரிக்கும் 

அன்பின் விலாசம் !

தாய்மைப் பண்போடு 

தூய்மை பணியாற்றும்

 தன்னம்பிக்கையின் பேரொளி !

வெள்ளை உடையில் தன் 

உள்ளம் பிரதிபலிக்கும் 

உன்னத சேவகி...!

கதறும் நெஞ்சங்களை 

கருணையால் தேற்றும் காரிகை !

காலம்தோறும் கனிவே துணையாக 

துணிவே அணியாகக் கொண்டு.. 

தரணியை உயிர்பிக்கும் சேவை நாயகிகள் 

பல்லாண்டு பணியாற்றி

நல்வாழ்வு நலம் காண எந்நாளும் 

நன்றிமிகுந்த வாழ்த்துகள் !!

Post a Comment

0 Comments