பத்தாம் வகுப்பு - தமிழ்
பொதுத்தேர்வில் வெற்றி !
வினா எண் - 44 , விரிவானம்
விரிவானம்
வினா எண் : 44
1) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க
முன்னுரை:
கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பற்றிய கதை.
அன்னமய்யா:
1. ஏழை விவசாயி.
2. பசித்தவருக்கு உணவு தருபவர்.
3. முன் பின் தெரியாத இளைஞனுக்கு உணவு அளித்தவர்.
4. கலயத்தில் இருந்த கஞ்சியை இளைஞனுக்குக் கொடுத்தார்.
பெயர்ப்பொருத்தம்:
பசியாறிய இளைஞன்அவருடைய பெயரைச் சொல்லி மகிழ்ந்தான்.
முன்னுரை:
தமிழகப் பண்பாடுகளுள் சிறந்தது விருந்தோம்பல். கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பற்றிய கதையை கி.இராஜநாராயணன் நம்மிடையே பகிர்ந்துள்ள விதத்தைப் பார்ப்போம்.
அன்னமய்யா:
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்பதற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் அன்னமய்யா. வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அன்னமய்யா களைத்துப் போன ஒருவரைச் சாலையில் கண்டார். அவருக்கு உதவி தேவை என்பதை அறிந்து அழைத்து வந்தார்.
அன்னமய்யாவின் செயல்:
சாலையில் களைத்து வந்த இளைஞன் அன்னமய்யாவிடம் கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா? எனக் கேட்டார். அன்னமய்யா 'இதோ நீச்சத் தண்ணீ எடுத்து வருகிறேன்.'எனக் கூறி தேங்காய் சிரட்டையில் ஊற்றித் தந்தார்.அத்துடன் தான் வைத்திருந்த துவையலையும் கொடுத்தார்.
பெயர்ப் பொருத்தம்:
கஞ்சியைக் குடித்த இளைஞன் அன்னமய்யாவின் பெயரைக் கேட்டான். அன்னமய்யா தன் பெயரைக்கூற வழிப்போக்கன் சிரித்தபடியே பெயருக்கேற்ற மனசு என்பதை தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
முடிவுரை:
பெயருக்கு ஏற்ற பெருந்தகையாளர் அன்னமய்யா. தமிழர் பண்பாட்டை இன்றும் காத்து வருபவர்கள் கிராமத்து மக்களே! தர்மம் தலைகாக்கும்!
0 Comments