உலக சகோதரர்கள் தினம்
சிறப்புக் கவிதை
24 • 05 • 2022
அம்மாவின் அன்பும் ,
அப்பாவின் பண்பும்
ஒன்றெனக் கலந்து
பிணைந்துஉருவான
ஒப்பற்ற உறவே சகோதரன்!
அன்பு காட்டி அரவணைக்கும்
பண்பெனும் பாச தீபம் சகோதரன்!
அன்றலர்ந்த மலர் போல மகிழ்ச்சி தந்து
நிதமும் உதிக்கும் பகலவனாய் ஒளிதரும்
நம்பிக்கை நட்சத்திரம் சகோதரன் !
ஓயாத சண்டையிட்டப் போதும்
ஒப்புமையில்லா ஒருங்கிணைப்பாளன் சகோதரன் !
வீட்டின் கட்டமைப்பே சகோதரன் !
தந்தைக்குப் பின் குடும்ப பாரத்தையும் , பாசத்தையும்
சுமப்பவனும்.... -- அவற்றை
பழுதுபடாமல் காப்பவனும் சகோதரன் !
மற்றவர் தவறுகளை மறந்து
குடும்ப உறவுகளை வளர்ப்பவர் சகோதரன் !
சொந்தமெனும் கப்பலுக்கு
நங்கூரமானவன் சகோதரன் !
அண்ணன் - தம்பி
அக்கா -தம்பி, அண்ணன் - தங்கையென
உன்னத உறவாய் மலர்பவன் சகோதரன் !
தன்னை பக்குவமாக்கி பாசம் தரும் பாதுகாவலன் சகோதரன் !
பல்வேறு சூழலிலும் பக்கபலமாக நின்று
தன்னலம் கருதாது குடும்ப...
உறவுகளின் நலன் காக்கும் அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் ....
இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துகள் !
0 Comments