தெலுங்குப் புத்தாண்டு ( யுகாதி ) வாழ்த்துகள் / HAPPY TELUNKU NEW YEAR WISHES

 


யுகாதி

  (  தெலுங்குப் புத்தாண்டு )

                 02 • 4 • 2022


கலாச்சாரத்தில் சிறந்த பாரதம் அவைதரும் கலைகளிலும்   ஒற்றுமையிலும் ஒப்பற்றதாக விளங்குகிறது.வாழ்வியல் காரணங்களோடு வளர்கலையும், மொழிநிலையும் செம்மை அடையச் செய்வதாகவே விளங்குகிறது.இந்திய இறையாண்மையின் படி அனைத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கும்   இடையூறுசெய்யாமல்,மதிப்பளித்து போற்றப்படுகிறது. ஆக இந்திய பண்டிகைகள் ஒற்றுமையின் ஒருங்கமைப்பு என்பது சாலப் பொருத்தம்.பன்மொழிகளில் மிளிரும் பாரதஅன்னைக்கு அனைத்து மொழி கலாச்சாரங்களுமே அணி செய்கின்றன. அந்த வகையில் இந்த யுகம் ஆரம்பமே யுகாதி எனக் கொண்டாடப் படுகிறது. தெலுங்கு நாள்காட்டியின் படி   புத்தாண்டின் தொடக்கமே இந்த யுகாதி எனப்படும் புத்தாண்டு.இவை தெலுங்கு , கன்னட மொழிகள் பேசும் மக்கள் மகிழ்ந்து கொண்டாடப் படும் பெருவிழாவாகி சிறப்புப்பெருகிறது.   மகாராஷ்டிர மக்கள் இந்நாளை " குடிபாட்வா " எனவும் பல வா றாகக் கொண்டாடுகின்றனர். இந்து புராணத்தின் படி பிரம்மா தமது படைத்தல் வேலையை இந்த நாளில் தான் தொடங் கினார் என்பது நம்பிக்கை.

                    அதனால் இப்பண்டிகை தென்னிந்தியாவில் முதன்மைப் பெற்ற முக்கிய விழாவாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. யுகாதியானது இளவேனிற் வருகைக்கு வெண்சாமரம் வீசும் கவரியாகி  வசந்தத்தின் தொடக்கத்தை வரவேற்கிறது . துளிர்த்த மர மெங்கும் மலர்ந்த பூக்கள் , செழித்த பழங்களுமாக மலர்ச்சியைக் காட்டுவது,  புதிய வாழ்க்கையின் ஆரம்பத்தை உணரத்துகிறது. மனித வாழ்வில் தோன்றும் இன்ப துன்பங்கள் மாறி மாறி வரும் . அதை எதிர்க் கொள்ளும் பக்குவமும் , பொறுமையும் பெறவேண்டும் என்பதை இந்த யுகாதிப் பண்டிகையின் வழியே உணர்த்தப் படுகிறது. 

        பங்குனி மாத அமாவசைக்கு அடுத்த நாள் யுகாதி கொண்டாடப்படுகிறது.இந்த சைத்ர மாதத்தின் முதல் நாளில் தான் பிரம்மன் உலகைப் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்நாளில் புதிய முயற்சிகளை தொடங்க ஏற்ற நாளாகக் கருதப்படுகிறது. மேலும் வசந்த கால ஆரம்பத்தையும் குறிப்பதால் இது சிறப்பும், முக்கியத்துவமும் பெற்ற திருவிழாவாகத் திகழ்கிறது.

 திருவிழாக்களில் சுத்தமும் , சுகாதாரமும் முதல் இடம் பெறுகிறது.அதாவது விழாக்கள் தொடங்கும் முன்பே வீட்டைச் தூய்மைப் படுத்துவதே சடங்காக அமைகிறது. ஆம். பசு சாணம் தெளித்த வாசல்கள் தோறும் அழகிய பல வண் ண ரங்கோலிகளின் ரம்மியமான காட்சிகள் காண்பவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இது சுற்றுச் சூழலைப் போற்றும் ஓர் தனித்துவமான பண்டிகையாகிறது. இந்நாளில் மக்கள் அதிகாலை துயில் நீங்கி, எண்ணெய் குளியல் செய்து , புத்தாடை அணிந்த பின்பு ஞான முதல்வன் ,திருமால்,கெளரி, அம்பிகை போன்ற தெய்வங்களை அழகுப்படுத்தி , அவற்றின் முன் போளி, புளியோதரை, பாயாசம் போன்றவற்றை படையலிட்டு தெய்வீக உணர்வு மேலோங்க ஏழுசுரங்களைப் பாடி, ஆரத்தி  ஏந்தி , ஆராதனை செய்தப்பின் ஏழைகளுக்கும் உணவு வழங்குவர். இது எளியோருக்கு உதவும் உயர்ந்த வழக்மாகிறது. 

                பின்பு தம் இல்லம் நாடி வந்த விருந்தினருக்கு சுவை மிகுந்த  உணவுகள் பல வழங்கி மகிழ்வர். குடும்ப உறுப்பினர்களின் நலன் காக்கும் திட்டமாக வருங்காலம் பற்றிய ஆய்வுக்கு முக்கிய த்துவம் கொடுக்கப் படுகிறது. இவற்றை அறிய ஜோதிடக்கலை வல்லுநரை அழைத்து குடும்ப உறுப்பினர்கள் நேரம் எப்படி உள்ளதென தெள்ளத் தெளிவாக கணிக்கப் பட்டு நம்பப்படுகிறது.இந்த குடும்பச் சடங்கு முடிந்து பின் பொதுச் சடங்காக இலக்கியம் சார்ந்த விவாதங்கள் , கவிதைப் போட்டிகள் , சொற்பொழிவுகள், கூட்டங்கள் போன்றவை   நடைபெறுகின்றன. 

          யுகாதியின் சிறப்பு அறுசுவையில் வாழ்வியல் அர்த்தம் சொல்லும் யுகாதிப் பச்சடி ஆகும்.இவை ஆந்திர பச்சடி எனவும், கர்நாடகாவில் 'தேவபெல்லா 'எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பயன்களும் , குறிப்புகளும் பல நன்மைகளைத் தருகின்றன. 

* இனிப்பு -- வெள்ளம்-- மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

* உவர்ப்பு-- உப்பு -- வாழ்க்கையின் மீதான பற்றை காட்டுகின்றன.

* கசப்பு -- வேப்பம் பூக்கள் -- வாழ்வின் துயரங்களைக் குறிக்கிறது.

* புளி -- புளிப்பு -- சவாலான சுழலை நினைக்க வைக்கிறது.

* துவர்ப்பு -- மாங்காய் - சவாலையும், அசத்தலையும் காட்டவும்

* கார்ப்பு-- காரம் -- கோபம் ஏற்படும் நேரங்களை காட்டவும்என இந்த அறுசுவையின் உட்பொருள் விளக்குவது மனித வாழ்வில் நிகழும்  ஆறு கட்டத்தையும் சமமாகக் கொண்டு வாழ்வை சிறப்பாக்கி வாழ்வதே  சிறந்த பண்பாடு என்பதை எடுத்து இயம்புகிறது இந்த யுகாதி பச்சடி.பச்சடியை , பச்சடிசுலோகம் சொல்லியப் பின் அனைவரும் உண்பர். இதனால் உடல் நலம் , நல்ல உடல்வாகு பெற்ற நலம் கிட்டும் என நம்பப்படுகிறது. யுகாதி கொண்டாடும் தெலுங்கு , கன்னட , மராட்டிய மக்கள் நீங்கா நலமும் , வளமும் பெற்று மகிழ்வான வாழ்வுக் காண வாழ்த்துவோம்.!

**************    ************  **************

Post a Comment

0 Comments