கோடையைக் கொண்டாடுவோம் !

 


கோடையைக் கொண்டாடுவோம் !
(சிறுவர் பாடல் )

கோடை விடுமுறை வந்ததே !
குதூகலம் நமக்குத் தந்ததே !
பள்ளி நினைவு மறந்ததே !
விளையாட்டு நினைவு பிறந்ததே !

தினுசு தினுசா விளையாடி
புதுசு புதுசா மகிழ்ந்தாடி
திசைகள் நான்கும் பறந்தோடி
திரிவோம் நாங்கள் வானம்பாடி !

காலை மாலை வேளைகளில்
கவலை இன்றிப் பறந்திடுவோம் !
நேரம் போவதும் தெரியாமல்
வீட்டை நாமும் மறந்திடுவோம் !

இளநீரும் பதனீரும் நுங்கும்தான்
கோடையை இதமாய் மாற்றிடுமே !
கோலியும் பம்பரமும் டயரும்தான்
மகிழ்ச்சியில் நம்மை ஏற்றிடுமே !

பல்லாங் குழியும் பாண்டியும்தான்
பெண்கள் விளையாட்டின் எல்லையே !
தாயம் போட்டு விளையாட
காயம் ஏதும் இல்லையே !

உறவைத் தேடிச் சென்றிடுவோம் !
உள்ளம் மகிழப் பேசிடுவோம் !
தாத்தா பாட்டி மனங்களை
கதைகள் சொல்லி வென்றிடுவோம் !

மு.மகேந்திர பாபு , ஆசிரியர் ,
49 , விக்னேஷ் அவென்யு
இரண்டாவது தெரு ,
கருப்பாயூரணி , மதுரை - 20
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments