10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு - சரியான விடையைத் தேர்ந்தெடு - ஒருமதிப்பெண் வினா & விடை / 10th SOCIAL SCIENCE - HISTORY - CHOOSE THE BEST ANSWER

 


பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

குறைக்கப்பட்ட பாடங்கள்

வினாக்களும் விடைகளும்

வரலாறு - முழுமையும்

அலகு - 1

1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

அ ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, உதுமானியா 

ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

ஈ) ஜெர்மனி, ஆஸ்திரி.ப- ஹங்கேரி. இத்தாலி

விடை : அ ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, உதுமானியா 

2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடியுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

அ )  சீனா

ஆ) ஜப்பான் 

இ) கொரியா

ஈ) மங்கோலியா

விடை : ஆ ) ஜப்பான் 

3. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

அ ) ஆகாயப் போர் முறை

ஆ) பதுங்குக் குழிப் போர் முறை

இ) நீர்மூழ்கிக் கப்பல் போர் முறை

ஈ) கடற்படைப் போர் முறை

விடை : ஆ ) பதுங்குக் குழிப் போர் முறை

4. பள்ளாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ )  பிரிட்டன் ஆ) பிரான்ஸ்

 இ) டச்சு ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை : அ )  பிரிட்டன் 

5. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

அ ) ஜெர்மனி ஆ) ரஷ்யா 

இ) இத்தாலி ஈ) பிரான்ஸ்

விடை : ஆ )  ரஷ்யா 

அலகு 2

இல்லை

அலகு 3

1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

அ )  செப்டம்பர் 2 , 1945 

ஆ) அக்டோபர் 2, 1945 

இ) ஆகஸ்டு 15, 1945

 ஈ) அக்டோபர் 12, 1945

விடை : அ ) செப்டம்பர் 2 , 1945 

2. பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

அ ) ரூஸ்வெல்ட்

ஆ) சேம்பெர்லின் 

இ) உட்ரோ வில்சன் 

ஈ) பால்டுவின்

விடை : இ )  உட்ரோ வில்சன் 

3. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

அ )  க்லாடல்கெனால் போர்

ஆ) மிட்வே போர்

இ ) லெனின் கிரேடு போர்

ஈ) எல் அலாமெய்ன் போர்

விடை : ஆ )  மிட்வே போர்

4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

அ )  கவாசாகி

ஆ) இன்னோசிமா 

இ) ஹிரோஷிமா

ஈ) நாகாசாகி

விடை : இ ) ஹிரோஷிமா

5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

அ )  ரஷ்டர்கள்

ஆ) அரேபியர்கள் 

இ) துருக்கியர்கள் 

ஈ) யூதர்கள்

விடை : ஈ ) யூதர்கள்

6. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

அ ) சேம்பர்லின்

ஆ) வின்ஸ்டன் சர்ச்சில்

இ) லாயிட் ஜார்ஜ்

ஈ) ஸ்டேன்லி பாண்டுவின்

விடை : அ ) சேம்பர்லின்

7. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

அ) ஜூன் 26, 1942 

ஆ) ஜூன் 26, 1945 

இ) ஜனவரி 1, 1942

ஈ) ஜனவரி 1, 1945

விடை : ஆ )  ஜூன் 26, 1945 

அலகு 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - இல்லை

அலகு 5

1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

அ ) 1827  ஆ ) 1829

இ ) 1826    ஈ) 1927

விடை : ஆ ) 1829

2. தயானந்த சரஸ்வதியால்நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

அ) ஆரிய சமாஜம் 

ஆ)  பிரம்ம சமாஜம் 

இ) பிரார்த்தளை சமாஜம் 

ஈ) ஆதி பிரம்ம சமாஜம்

விடை : அ ) ஆரிய சமாஜம் 

3. யாருடைய பணியும் இயக்கமும் 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் 

ஆ) ராஜா ராம் மோகன் ராய் 

இ) அன்னிபெசன்ட் 

ஈ) ஜோதிபா பூலே

விடை : அ )  ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் 

4. “ ராஸ்ட் கோப்தார்" யாருடைய முழக்கம்?

அ) பார்சி இயக்கம் 

ஆ) அலிகார் இயக்கம் 

இ ) ராமகிருஷ்ணர் 

ஈ) திராவிட மகாஜல்

விடை : அ ) பார்சி இயக்கம் 

5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார் ?

அ பாபா தயாள் தாஸ் 

ஆ) பாபாராம்சிங் 

இ) குருநானக் 

ஈ) ஜோதிபா பூலே

விடை : ஆ )   பாபாராம்சிங் 

6 ) விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார் ?

அ) M.G.ரானடே 

ஆ ) தேவேந்திர நாத் தாகூர்

இ ) ஜோதிபா பூலே

ஈ ) அய்யன்காளி

விடை : அ ) M.G.ரானடே

7. “சத்யார்த்த பிரகாஷ்” எனும் நூலின் ஆசிரியர் யார்?

அ) தயானந்த சரஸ்வதி 

ஆ) வைகுண்ட சாமி 

இ) அன்னிபெசன்ட் 

ஈ) சுவாமி சாரதாநந்தா

விடை : அ )  தயானந்த சரஸ்வதி 

                          அலகு 6

1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?

அ) மருது சகோதரர்கள் 

ஆ) பூலித்தேவர் 

இ) வேலு நாச்சியார் 

ஈ) வீர பாண்டியகட்டபொம்மன்

விடை : ஆ ) பூலித்தேவர் 

2. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

அ) வேலு நாச்சியார் 

ஆ) கட்டபொம்மன் 

இ) பூலித்தேவர் 

ஈ) ஊமைத்துரை

விடை : இ ) பூலித்தேவர்

3. சிவசுப்ரமணியனார் எங்கு துாக்கிலிடப்பட்டார்?

அ) கயத்தாறு 

ஆ) நாகலாபுரம் 

இ) விருப்பாட்சி 

ஈ) பாஞ்சாலங்குறிச்சி

விடை : ஆ ) நாகலாபுரம்

4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார் ?

அ) மருது சகோதரர்கள்

ஆ) பூலித்தேவர்

இ) வீரபாண்டிய கட்டபொம்மன்

ஈ) கோபால நாயக்கர்

விடை : அ ) மருது சகோதரர்கள்

5. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

அ) 1805 மே 24

ஆ) 1805 ஜூலை 10 

இ) 1806 ஜுலை 10 

ஈ) 1806 செப்டம்பர் 10

விடை : இ ) 1806 ஜுலை 10 

6. வேலூர் கோட்டையில் இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

அ) கர்னல் பேன்கோர்ட் 

ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் 

இ) சர் ஜான் கிரடாக் 

ஈ) கர்னல் அக்னியூ

விடை : இ ) சர் ஜான் கிரடாக் 

7. வேலூர் புரட்சிக்குப்பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

அ) கல்கத்தா 

ஆ) மும்பை

இ) டில்லி

ஈ) மைசூர்

விடை : அ) கல்கத்தா 

அலகு 7

1. 1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி வாரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத்   தொடங்கினார்?

அ) வஹாபி கிளர்ச்சி 

ஆ) ஃபராசி இயக்கம் 

இ) பழங்குடியினர் எழுச்சி 

ஈ) கோல் கிளர்ச்சி

விடை : ஆ ) ஃபராசி இயக்கம் 

2. “நிலம் கடவுளுக்குச் சொந்தம்” என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ, வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?

அ) டிடு மீர்

ஆ) சித்து

இ) டுடு மியான்

ஈ) ஷாரியத்துல்லா

விடை : இ ) டுடு மியான்

3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?

அ) சாந்தலர்கள் 

ஆ) டிடு மீர்

இ) முண்டா

ஈ) கோல்

விடை : அ ) சாந்தலர்கள் 

4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?

அ) தாதாபாய் நௌரோஜி

ஆ) நீதிபதி கோவிந்த ராணடே

இ) பிபின் சந்திர பால்

ஈ) ரொமேஷ் சந்திரா

விடை : இ ) பிபின் சந்திர பால்

5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?

அ) 1905 ஜூன் 19 

ஆ) 1906 ஜூலை 18 

இ) 1907 ஆகஸ்ட் 19 

ஈ) 1905 அக்டோபர் 16

விடை : ஈ ) 1905 அக்டோபர் 16

6. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?

அ) கோல் கிளர்ச்சி 

ஆ) இண்டிகோ கிளர்ச்சி 

இ) முண்டா கிளர்ச்சி 

ஈ) தக்காண கலவரங்கள்

விடை : இ ) முண்டா கிளர்ச்சி 

7. 1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

அ) அன்னி பெசன்ட் அம்மையார் 

ஆ) பிபின் சந்திரபால் 

இ) லாலா லஜபதி ராய்

ஈ) திலகர்

விடை : ஈ ) திலகர்

8. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?

அ ) தீன பந்து மித்ரா 

ஆ) ரொமேஷ் சந்திர தத் 

இ) தாதாபாய் நௌரோஜி 

ஈ) பிர்சா முண்டா

விடை : அ ) தீன பந்து மித்ரா 

அலகு : 8

1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர் யார்?

அ) மோதிலால் நெரு 

ஆ) சைஃபுதீன் கிச்லு 

இ) முகம்மது அலி 

ஈ) ராஜ் குமார் சுக்லா

விடை : ஆ ) சைஃபுதீன் கிச்லு 


2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

அ) பம்பாய்

ஆ) மதராஸ்

இ) கல்கத்தா 

ஈ) நாக்பூர்

விடை : இ ) கல்கத்தா 

3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

அ) 1930 ஜனவரி 26 

ஆ) 1929 டிசம்பர் 26 

இ) 1946 ஜுன் 16 

ஈ) 1947 ஜனவரி 15

விடை : அ ) 1930 ஜனவரி 26 

4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

அ ) 1858

ஆ ) 1911

இ ) 1865

ஈ ) 1936

விடை : இ ) 1865


5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

அ) கோவில் நுழைவு நாள்

ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

இ) நேரடி நடவடிக்கை நாள்

ஈ) சுதந்திரப் பெருநாள்

விடை : அ ) கோவில் நுழைவு நாள்


6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

அ) 1858 ஆம் ஆண்டு சட்டம்

ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909

இ) இந்திய அரசுச் சட்டம், 1919

ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

விடை : ஈ ) இந்திய அரசுச் சட்டம், 1935

                     அலகு 9

1 ) சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

அ) T. M. நாயர் 

ஆ) P. ரங்கைய நாயுடு 

இ) G. சுப்ரமணியம் 

ஈ) G. A நடேசன்

விடை : ஆ )  P. ரங்கைய நாயுடு 

2. இந்திய தேசியக் காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

அ) மெரினா 

ஆ) மைலாப்பூர் 

இ) புனித ஜாாஜ் கோட்டை 

ஈ) ஆயிரம் விளக்கு

விடை : ஈ ) ஆயிரம் விளக்கு

3. “அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு
வண்டியே சிறந்தது ” எனக் கூறியவர் யார்?

அ) அன்னிபெசன்ட் 

ஆ) M. வீரராகவாச்சாரி

இ) B.P வாடியா

 ஈ) G.S அருண்டேல்

விடை : அ ) அன்னிபெசன்ட் 

4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜியவாதி யார்?

அ) S. சத்தியமூர்த்தி 

ஆ) கஸ்துாரிரங்கர் 

இ) P. சுப்பராயன் 

ஈ) பெரியார் ஈ.வே.ரா

விடை : அ ) S. சத்தியமூர்த்தி 

5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

அ) K. காமராஜ் 

ஆ) C. ராஜாஜி

இ) K. சந்தானம் 

ஈ) T. பிரகாசம்

விடை : ஈ ) T. பிரகாசம்

6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

அ) ஈரோடு 

ஆ) சென்னை

இ) சேலம்

ஈ) மதுரை

விடை : இ ) சேலம்

                           அலகு 10

1. 1709 இல் தரங்கம்பாடியில் ----- ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார் .

அ) கால்டுவெல்

ஆ) எப்.டபிள்யூ. எல்லிஸ் 

இ) சீகன்பால்கு 

ஈ) மீனாட்சி சுந்தரம்

விடை : இ ) சீகன்பால்கு 

2. 1893 இல் ஆதி திராவிட மகாஜன சபையை -------  நிறுவினார்.

அ) இரட்டைமலை சீனிவாசன் 

ஆ) B.R. அம்பேத்கார் 

இ) ராஜாஜி 

ஈ) எம்.சி. ராஜா


விடை : அ ) இரட்டைமலை சீனிவாசன் 


3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ------
இல் உருவாக்கப்பட்டது.

அ) 1918

ஆ ) 1917

இ) 1916

ஈ )  1914

விடை : ஈ )  1914

4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய
நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.

அ) பணியாளர் தேர்வு வாரியம்

ஆ) பொதுப் பணி ஆணையம்

இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

ஈ) பணியாளர் தேர்வாணையம்

விடை : அ ) பணியாளர் தேர்வு வாரியம்


5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அ) எம்.சி. ராஜா

ஆ) இரட்டை மலை சீனிவாசன் 

இ) டி.எம். நாயர் 

ஈ) பி. வரதராஜுலு

விடை : அ ) எம்.சி. ராஜா

***************  *************   ************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   ********

Post a Comment

0 Comments