ஏப்ரல் 1 முட்டாள் தினம் உருவான கதை / APRIL 1 , APRIL FOOLS DAY STORY

 


ஏப்ரல் முட்டாள்கள் தினம

                      ( April Fool's Day )

                          01 • 4 • 2022

   கடந்து வந்த குழந்தைப் பருவ குதூகல காலத்தை நினைத்துப்பார்கவும், மகிழ்ச்சிகொள்ளவும் ஒரு தினம் தேவைப் பட்டதோ? என எண்ணத் தோன்றும் அளவிற்கு ஒரு நாள் . அந்த தினத்தில் ஒருவரையாவது ஏமாறச் செய்து  மகிழ்வித்து மகிழ எண்ணம் சிறகடித்துப் பறக்கும். மறக்க முடியாத விளையாட்டுத்தனமும், ஆர்வமும் வயது பேதமின்றி அனைவரையும் குதூகலப்படுத்தும் நாளாகிறது   இத்தினம். வேடிக்கையாக நண்பர்களால் கேட்கப்படும் கேள்விகளை  நம்பி ஏமாந்தப் பின்பு உண்மை நிலைபுரிந்து, தான் ஏமாறுவதையும், தன்னால் ஏமாற்றப் படுவதையும் ரசித்து குறுநகை பூக்க ஏற்று, மகிழ்ச்சியில் திளைக்கும் நாள் இது. எனவே ஏப்ரல் முதல் நாளானது முட்டாள்கள் தினமாக  ஏற்கப்பட்டு நகைச்சுவையாக கொண்டாடப் பட்டு வருகிறது.

இது உலகம் முழுதும் வேலைபயனற்ற நாளாகக் கருதப்பட்டு இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதாவது அந்த நாளில் மனமகிழ்ச்சிக்காக, நகைச்சுவையாக குறும்புத்தனம் நிறைய... , ஒருவரை ஏமாற்றச் செய்து அதன் வழியாக, ஏமாந்தவர்களை" ஏப்ரல் முட்டாள்கள் " என அழைத்து ஆனந்தம் அடைவர்.

இந்த முட்டால் தினமானது 19 - ஆம் நூற்றாண்டு முதல் பிரபலமாக இருந்து வருகிறது.முதன் முதலில் பிரான்ஸ் நாட்டிலேயே அனுசரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.இத்தினம் ஐரோப்பியர்களால் 1500- ஆம் ஆண்டுகளில் கடைப்பிடிக்கப் பட்டது.அந்த தினத்திற்கு " ஏப்ரல் மீன்கள் " தினம் எனவும் பெயரிட்டு மகிழ்ந்தனர்.அதாவது பிரான்ஸில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அங்குள்ள ஆறுகள் , ஓடைகள் போன்ற நீர் நிலைகளில் நிறைந்த மீன்கள்காணப்பட்டன. அதனால் அந்த மீன்களைப் பிடிப்பது எளிதானது.எனவே இது மீன்களை ஏமாற்றும் தினமாக கருதப்பட்டுக் கொண்டாடப் பட்டது.பின்பு இந்த நிலை காலமாற்றத்தாலும், மனித கலைவளத்தாலும் மனிதர்களை ஏமாற்றும் நாளாக கொண்டாடப் பட்டது.

              16 -- ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் - 1- ஆம் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. பிறகு 1562 --ஆம் ஆண்டு போப்பாண்டவராகிய 13- ம் கிரகரி என்பவர்பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை தவிர்த்து, புதிய " கிரேகோரியன் " ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.இதன் படி ஜனவரி - 1 ம்நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி னர்.எனினும் இந்தப்புத்தாண்டு தினத்தை பல ஐரோப்பிய நாடுகளும் , அங்கு வாழ்ந்த மக்களும் ஏற்கவில்லை. அவற்றை ஏற்றுக் கொள்ள சில காலம் ஆனது.அதாவது 1852 - ஆம் ஆண்டு பிரான்ஸும், 1660 -- ம் ஆண்டு ஸ்காட்லாந்தும், 1700 -- ம் ஆண்டு நார்வே, டென்மார்க் , ஜெர்மன் போன்றவையும் , 1752 - ம் ஆண்டு இங்கிலாந்தும் இத்தினத்தை ஏற்றுக் கொண்டாடின. இதன்படி புதிய வழக்கத்தை ஏற்று , ஜனவரி முதலாம் நாளை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கினர். இந்த மக்கள் பழைய வழக்கத்தையும் பாதுகாத்து ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டு கொண்டாடுபவர்களை " ஏப்ரல் முட்டாள்கள் " என்று அழைத்தனர். எனவே அன்றே இத்தினமான ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கியதை அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிகழ்வுகளை ஆய்வுகள் ஆதாரமாகத் தெரிவிக்கின்றன. 

1539 - ம் ஆண்டுகளில் முட்டாள்கள் தினம் கொண்டாடிய செய்திகளை டச்சு மொழியின் வழியே அறியப்படுகிறது.

1466 - ம் ஆண்டு பிலிப் என்ற மன்னனை அவரது அரசவை விகடகவி போட்டி ஒன்றில் வென்று மன்னனை முட்டாள் ஆக்கிய தினமே இந்த ஏப்ரல் முதல் நாள் எனவும் கூறப்படுகிறது. இந்த முட்டாள்கள் தினமானது பிரான்ஸில் தோன்றி பின் இங்கிலாந்து , அமெரிக்கா என உலகின்  அனைத்துப் பகுதிகளையும் ஆட்கொண்டு ஏப்ரல் ஃபுல் இன்று  உலகத்தையே தன் வசமாக்கி வேடிக்கையும், விளையாட்டும், கேலிக்கையும் நிரம்பிய நாளாக மக்களை மகிழச் செய்கிறது. எனவே இந்த தினத்தை முட்டாள்கள் தினம் என முடிக்காமல், மனதை என்றும் இளமையாக்கும் விளையாட்டின் வழியே பல முன்னேற்ற உத்திகளை   கண்டுணர்ந்து, மனக்குறையை தகர்த்தெறியும், மாமந்திரமாம் மகிழ்ச்சியை தரும் நாளாக போற்றி இத்தினத்தை மகிழ்ந்து கொண்டாடுவோம்.!

Post a Comment

0 Comments