6 ஆம் வகுப்பு - தமிழ்
பருவம் 3 , இயல் 1,
பாரதம் அன்றைய நாற்றங்கால் &
தமிழ் நாட்டில் காந்தி
இயங்கலைத்தேர்வு
வினா உருவாக்கம் -
' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
1) ' பாரதம் அன்றைய நாற்றங்கால்' என்ற பாடலின் ஆசிரியர் யார்?
அ) தாராபாரதி
ஆ) யுகபாரதி
இ) பழநி பாரதி
ஈ) மகாகவி பாரதி
விடை : அ ) தாராபாரதி
2 ) நம் நாட்டில் இயற்கை வளங்கள் மட்டுமன்றி ----- வளங்களும் மிகுந்துள்ளன.
அ) மக்கள் வளம்
ஆ) கனிம வளம்
இ ) இலக்கிய வளம்
ஈ) எரிபொருள் வளம்
விடை : இ ) இலக்கிய வளம்
3) கீழ்க்காணும் நூல்களுள் தாராபாரதி எழுதாத நூல் எது?
அ) புதிய விடியல்கள்
ஆ) இது எங்கள் கிழக்கு
இ ) விரல் நுனி வெளிச்சங்கள்
ஈ) வைகறை மேகங்கள்
விடை : ஈ ) வைகறை மேகங்கள்
4 ) தாராபாரதியின் இயற்பெயர்
அ ) இராதா கிருஷ்ணன்
ஆ) நவநீத கிருஷ்ணன்
இ ) மாயக்கிருஷ்ணன்
ஈ) கோபிக்கிருஷ்ணன்
விடை : அ ) இராதா கிருஷ்ணன்
5 ) தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ------
அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை
விடை : ஆ ) திருக்குறள்
9 ) எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------
அ) எதிரலிக்க
ஆ) எதிர் ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க
விடை : இ ) எதிரொலிக்க
10 ) பாடலில் இடம்பெறாத கவிஞர் யார்?
அ) வள்ளுவன்
ஆ) காளிதாசன்
இ) கம்பன்
ஈ) பாரதி
விடை : ஈ ) பாரதி
11 ) தேசம் என்ற சொல்லின் பொருள் -----
அ) நாடு
ஆ) வீடு
இ) காடு
ஈ) உலகம்
14 ) காந்தியடிகள் ----- அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டுமென விரும்பினார்.
அ ) நாமக்கல் கவிஞர்
ஆ) பாரதிதாசன்
இ) உ.வே.சாமிநாதர்
ஈ) பாரதியார்.
விடை : இ ) உ.வே.சாமிநாதர்
15 ) ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் ------- வீட்டில் கருத்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
அ) காமராசர்
ஆ) ஜீவா
இ ) இராஜாஜி
ஈ) சத்திய மூர்த்தி
விடை : இ ) இராஜாஜி
18 ) ------- எழுதிய தமிழ்க்கையேடு காந்தியடிகளை மிகவும் கவர்ந்தது.
அ) பாரதி
ஆ) ஜி.யு.போப்
இ) லியோ டால்ஸ்டாய்
ஈ) இராஜாஜி
விடை : ஆ ) ஜி.யு.போப்
19 ) பணக்காரர் வீட்டில் வெளிநாட்டுப் பொருட்களை காந்தியடிகள் கண்ட ஊர் -----
அ ) சிவகங்கை
ஆ) காரைக்குடி
இ) கானாடுகாத்தான்
ஈ) தேவகோட்டை
விடை : இ ) கானாடுகாத்தான்
20 ) தமிழ்நாட்டில் காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ள ஊர் -----
அ) சென்னை
ஆ) திருச்சி
இ) கோவை
ஈ) மதுரை
விடை : ஈ ) மதுரை
***************** ************** **********
************ ************** *************
0 Comments