உலக புற்றுநோய் தினம் - WORLD CANCER DAY - 04 - 02 - 2022

 

உலக புற்றுநோய் தினம்

                         ( WORLD CANCER DAY)

                                    4 • 02 • 2022 

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான மரணத்தை ஏற்படுத்தக் கூடிய நோய் புற்றுநோய்.இந்நோய்ப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,வராமல் தடுக்கவும் , நோய் இருப்பதுகண்டறியப் பட்டால் தகுந்த சிகிச்சையை ஊக்குவிக்கும் விதமாக  ஆண்டு தோறும் பிப்ரவரி - 4 - ஆம் நாள் உலக புற்று நோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. 1993 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச புற்று நோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் ( UICC ) 2000 - ம் ஆண்டில் உலக புற்று நோய் தினத் தை உருவாக்கியது.இவை இன்றளவும் உலகளவில் புற்று நோய் விழிப்புணர்வை ஒருங்கிணைந்து பரப்பும் முயற்சியை WHO மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் போன்ற வை UICC - ஐ ஆதரித்து வருகின்றன. 

புற்று நோய் என்பது அதிபயங்கர மற்றும் அபாயகரமான நோய் என அறியப்பட்டபோதும்,அவைகுறித்த விழிப்புணர்வு இன்றளவில் இன்றியமையாததாகிறது. மேலும் நோயின் அறிகுறிகளும் , அவற்றுக்கான சிகிச்சை முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாகின்றன. புற்றுநோய் என்பது ஒரு கொடூர சொல்.இவை ஏற்படுத்தும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் ஏற்படும் கட்டிகள் அதிக தீங்கை விளைவிப்பதாகவும்,  மற்றும் தீங்கற்றதாகவும் வகைப்படுத்தப் படுகிறது.தீங்கற்றக்கட்டிகள் உடலின் உட்பகுதியில் உண்டாகக் கூடியவை .இவற்றின் வளர்ச்சி மெதுவாக இருக்கும்.ஆனால் தீங்குத் தரும் புற்றுக் கட்டிகள் வீரியம்மிக்க, மற்றும் வேகமாக வளரும் தன்மையுடைய பேராபத்தை உருவாக்கவல்லது. சாதாரண உயிரணு வளர்ச்சியின் ஒழுங்கான பாதையில் மரபணுக்களுக்கு ஏற்படும் தீங்கு DNA- வில் ஏற்படும் சேதங்களோ,பிறழ்வோ செல் பிரிவில் ஏற்படுகிறது.இந்த நோய் வந்தாலே மரணம் என்ற நிலை மாறி , இன்றைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, நோய் கண்டறியப் பட்ட பின்பும் ,நோயாளியின் வாழ்நாளை நீட்டித்து காக்கும் வழி காணப்படுகிறது.ஒருவர் தன் உடலில் புதிய மற்றும் வித்தியாசமான அறிகுறிகளை தொடர்ந்து பல வாரங்களாக காணப்பட்டால் , உடனடியாக மருத்துவ உதவியை செய்யப்பட வேண்டுமென அமெரிக்காவின் சிறந்த மருத்துவ மையமான " கலிஃபோர்னியா  பல்கலைக்கழகம் (UCSF - Health)" பரிந்துரைக்கிறது.புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பரிசோதனையை தொடங்கி , சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் புற்று நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். மேலும் புற்றுநோய்க்கான சிகிச்சை  நோயின் வகை, அதன் நிலை, உடல்நிலை, வயது , போன்றவற்றின் அடிப்படையில் தரப்ப டுகிறது.இதற்கான சிகிச்சைகளும் பல வகைகளில் உள்ளன. அவை ரேடியேஷன் ( Radiation therapy),கீமோதெரபி ( Chemo therapy ) , இம்மினோ தெரபி ( Immuno therapy ) , ஹார்மோன் தெரபி ( Hormone therapy  ) , ஜீன் தெரபி ( Gene therapy  ) போன்ற சிகிச்சைகள் மேற்கள்ளப்பட்டு நோயின் வீரியத்தைக் குறைத்து மருத்துவத்துறை நோயாளிகளின் வேதனையை போக்கும் களமாக செயல்படுகிறது.ஆண்களை பாதிக்கும் புற்றுநோய்களாவன , புராஸ்டேட் ( Prostate Cancer  ),நுரையீரல் ( Lung Cancer ) , பெருங்குடல் ( Colorectal Cancer  ), வயிறு ( Stomach Cancer  ) , கல்லீரல் ( Liver Cancer ) போன்றவைகளாகும். பெண்களைப் பாதிக்கும் நோய்கள் மார்பகம் ( Breast Cancer), பெருங்குடல் ( ColorectalCancer) , நுரையீரல் ( LiverCancer  ),கர்ப்பவாய் புற்று ( Cervical Cancer  ), தைராய்டு புற்று ( Thyroid Cancer  ) போன்றவற்றால் பாதிப்படைகின்றனர்.இந்த நோயை உண்டாக்கும் காரணிகளாக இருப்பவைகள், உடற் பருமன், புகையிலைப் பயன்பாடு , பழங்கள் , காய்கறிகள் ,-போன்றவைகளின் பயன்பாடு குறைதல் , உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது.ஆல்கஹால் பழக்கம் , பாலியல் ரீதியாக பரவும் HPV - தொற்று , நகர்ப்புற மாசுபட்ட காற்று , புகை போன்றவை புற்றுநோய் உண்டாக வழிவகைசெய்கிறது.


புற்றுநோய்க்கான சில அறிகுறிகள் ;

* மரு அல்லது மச்சத்தில் தோன்றும் மாற்றம்.

* தொடர்இருமல் அல்லது குரல் கரகரப்பு.

* அஜீரணம் மற்றும் விழுங்குவதில் சிரமம்.

* அதிக இரத்தப் போக்கு ,

* மார்பகம் மற்றும் வேறு எந்த இடத்திலும் தோன்றும் கட்டிகள். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டவுடன், மருத்துவ உதவியைப் பெற்றால் , முன் கூட்டியே இதன் தீவிரத்தைக் கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்த முடியும். 


வரும்முன் காக்கும் செயல்களாவன;

*தேவையான உடற் பயிற்சி அவசியமாகின்றன. 

* மனம் மற்றும் உடல் நலத்திற்கு தியானமும் , யோகா பயிற்சியும் நிறைந்த பயன்களையும், பலன்களையும் தரும்.

* எப்போதும் மனதை தெளிவாகவும் , அமைதியாகவும் வைத்திருப்பது நலம்பெற வழிக்காணும். 

* புத்தகம் வாசித்தலும், மெல்லிசையை கேட்பதும் மனதை இதமாக வைத்திருக்க உதவும் .

எனவே இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள ஆரோக்கியம் தரும் நல்ல உணவும் , நல்ல பழக்க வழக்கங்களும் , சரியான நோய் தடுப்பு முறையும் , தொடர்ந்து உடல் நல பரிசோ  தனைகளை செய்துகொள்ளுதலும், புற்று நோய் இருப்பின் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து , தகுந்த சிகிச்சையைமேற்கொள்ளுதல் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் இந்த நோயை வென்று உலகைப் பாதுகாப்போம்.!

Post a Comment

0 Comments