TNPSC , TRB போட்டித்தேர்வில் வெற்றி - கடையேழு வள்ளல்களும் நாடிகளும் / KADAIYELU VALLALKALUM NADUKALUM - TNPSC & TRB - TAMIL

 


போட்டித்தேர்வில் வெற்றி  ( TNPSC , TRB , TET )

வள்ளல்கள் மற்றும் அவர்கள்

ஆட்சி செய்த பகுதிகள்

பேகன் : பேகனின் ஊரான ஆவினன் குடி 'பொதினி' என்று அழைக்கப்பட்டு, தற்போது 'பழனி' எனப்படுகிறது.

பாரி : பாரியின் நாடு, பறம்பு மலையும் அதைச் சூழ்ந்திருந்த 300 ஊர்களும் ஆகும். பறம்பு மலை, பிறம்பு மலையாகி தற்போது 'பிரான் மலை' எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில்   சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.

காரி : மலையமான் திருமுடிக்காரியின் நாடு மலையமான் நாடு ஆகும். இது மருவி ‘மலாடு' எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோயிலூரும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் ஆகும்.

ஆய் : ஆய் அண்டிரனின் நாடு பொதிய மலை ஆகும். தற்போது அகத்தியர் மலை' எனப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப் பகுதிகளும் அவற்றைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் ஆகும்.

அதியமான் : அதிகமான் நெடுமான் அஞ்சி, ‘தகடூர்' எனப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். இப்பகுதியில் உள்ள ‘பூரிக்கல்' என்ற மலையிலிருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை ஔவைக்கு கொடுத்தான்.

நன்னி : நளிமலை நாடானின் நாடு `நெடுங்கோடு மலை முகடு'   என்றழைக்கப்பட்ட பகுதியாகும். தற்போது உதகமண்டலம் (ஊட்டி)   எனப்படுகிறது.

ஓரி : வல்வில் ஓரியின் நாடு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையும் அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.

நல்லியக்கோடன் : நல்லியக்கோடன் ஆட்சி செய்த 'ஒய்மா நாடு'என்பது திண்டிவனத்தைச் சார்ந்த பகுதிகளாகும்.

முல்லைக்குத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவை அல்ல, ஈகை உணர்வின் காரணமாக செய்யப்பட்டவை. இதையே பழமொழி நானூறு ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்று கூறுகிறது.

புறநானூறு குறிப்பிடும் வள்ளல்

பழனி மலைத் தொடர்களில் ஒன்றான முதிரமலையை ஆட்சி செய்த மன்னன் குமணன். தன் தம்பியாகிய இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்து விட்டு காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தான். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து வருவோர்க்கு பரிசில் அறிவித்திருந்தான்.

காட்டில் தன்னை நாடி வந்த புலவர் பெருந்தலைச் சாத்தனாருக்கும்   கொடுக்க தன்னிடம் பொருள் இல்லாததால், தன் இடைவாளைத் தந்து தன் தலையை அரிந்து சென்று இளங்குமணனிடம் பரிசில்,   பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான்; அதனால் 'தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்' என்று போற்றப்படுகிறான்.




Post a Comment

0 Comments