PG TRB - தமிழ் - பகுதி 7 , சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு

 

9. பட்டினப்பாலை

+ சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய இப்பாட்டு 301 அடிகளைக் கொண்டது.

இது வஞ்சியடிகள் மிகுதியும் விரவிய ஆசிரியப்பாவாலும் அமைந்தது. புலவர் இதனைப் பாடியதற்காகப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசாகப் பெற்றார் என்பர்.

+ சோழ வளநாடும், காவிரிப்பூம்பட்டினமும் அங்கு வாழும் மக்களின் விளையாட்டுகளும், துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியாகும்  பொருள்களும், கடைத்தெருவும், அதனை ஆளும் திருமாவளவன் 11 (வரலாறும் அவன் ஆற்றலும் பேசப்படுகின்றன.

10. மலைபடுகடாம்

இப்பாட்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பல்குன்றக் கோட்டத்துச் செங்கமண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது.

+ 583 அடிகளைக் கொண்டது. இது கூத்தன் ஒருவன் மற்றொரு கூத்தனை மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

* அதனால் இதற்குக் கூத்தராற்றுப்படை என்ற பெயரும் உண்டு. மலைக்கு யானையை உவமித்து அதன் கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டு மலைபடுகடாம் என்னும் பெயரைப் பெற்றது.

“அலகைத் தவிர்த்த வெண்ணருத் திறத்த

மலைபடு கடாஅம் மாதிரத் தியம்ப'

என்னும் அடிகள் பாட்டின் பெயர்க் காரணத்தைப் புலப்படுத்துகின்றன.


Post a Comment

0 Comments