தமிழ் - முதுகலை
PG TRB - தமிழ்
7 , சங்க இலக்கியம்
3. நற்றிணை
நூற்குறிப்பு :
*எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் 'நல்' என்னும் அடைமொழி பெற்றுப் போற்றப்படுவதும் நற்றிணையே ஆகும்
* நற்றிணை பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட தொகுப்பு நூல் ஆகும்.
* ஓரறிவு உயிர்களைக்கூட விரும்பும் உயரிய பண்பு விருந்தோம்பல். அறவழியில் பொருளீட்டல் முதலான தமிழர்தம் உயரிய பண்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பும் நூல் இது
* குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணைகளுக்கும் பாடல்கள் உள்ளன.
* இதில் உள்ள பாடல்கள் ஒன்பது அடிச் சிற்றெல்லையும், பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை. (அதாவது, குறைந்தது ஒன்பது அடியிலிருந்து 12 அடி வரை பாடல்கள் அமைந்துள்ளன)
* இப்பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி
* நற்றிணைப் பாடல்கள் நானூறு பாடிய புலவர்கள் 275 பேர்.
* இதற்கு கடவுள்வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
* இந்நூலை 1915-இல் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் முதன்முதலாகப் பதிப்பித்தார்.
*************** ************* *************
கல்விப் பணியில் ,
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் . மதுரை - 97861 41410
YOU TUBE - GREEN TAMIL
************** *********** **************
0 Comments