தமிழ்த்தாத்தா உ.வே.சா.பிறந்த நாள் - சிறப்புத்தேர்வு - வினா & விடை / ONLINE CERTIFICATE TEST - QUESTION & ANSWER

 

உ.வே.சா பிறந்த நாள் ( பிப்ரவரி 19 )

 சிறப்புஇயங்கலைத் தேர்வு

வினா உருவாக்கம் 

திருமதி உமா மகேஸ்வரி,

முதுகலைத்தமிழாசிரியை & தலைமையாசிரியை

அ.மே.நி.பள்ளி, 

சத்திரரெட்டியபட்டி, விருதுநகர்.

பைந்தமிழ் மு.மகேந்திர பாபு,

 தமிழாசிரியர், மதுரை.

1) உவே.சா. பெயர் விரிவாக்கம் -----

அ) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்

ஆ) உலகனேரி வேங்கையன் சாமிநாதன்

இ ) உடுமலை வேலுச்சாமி சாமிநாதன்

ஈ) உத்தரமேரூர் வேங்கடப்ப சாமிநாதன்

விடை : அ) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்

2) தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் உ.வே.சா. பெற்ற சிறப்புப் பெயர் ------

அ) தமிழ்க்கடல்

ஆ) பதிப்புச்செம்மல்

இ) தமிழ்த்தாத்தா

ஈ ) கவியோகி


விடை : இ) தமிழ்த்தாத்தா

3) உ.வே.சா. அவர்கள் பிறந்த ஆண்டு ----

அ) 1845

ஆ) 1855

இ ) 1865

ஈ ) 1875

விடை : ஆ) 1855

4) உ.வே.சா.தம் 17 ஆம் வயதில் ------
ஆதினத்தில் தமிழ் பயின்றார்.

அ) மதுரை ஆதினம்

ஆ) குன்றக்குடி

இ) திருப்பனந்தாள்

ஈ) திருவாவடுதுறை

விடை : ஈ) திருவாவடுதுறை

5) உ.வே.சா அவர்களின் ஆசிரியர் -----

அ) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஆ) சென்னிமலை அண்ணாமலை ரெட்டியார்

இ) கும்பகோணம் சுப்பிரமணிய முதலியார்

ஈ) சேலம் சிங்காரவேலர்.

விடை :  அ) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

6) உ.வே.சா.ஆசிரியராகப் பணியாற்றிய
கல்லூரிகள் ------ , ------- ல் உள்ளன.

அ) மதுரை , நெல்லை

ஆ) கும்பகோணம் , சென்னை மாநிலக்கல்லூரி

இ) திருச்சி, தஞ்சை

ஈ) சேலம் , கோவை

விடை :  ஆ) கும்பகோணம் , சென்னை மாநிலக்கல்லூரி

7) சீவகசிந்தாமணி நூலைப்
பதிப்பிப்பதற்குப் பெரிதும் துணையாக
இருந்தவர் ------

அ) தந்தை பெரியார்

ஆ) அறிஞர் அண்ணா

இ) சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார்

இ) தீரர் சத்தியமூர்த்தி

விடை :  இ) சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார்

8) புறநானூற்றை உ.வே.சா.அவர்கள் -----
ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.

அ) 1890

ஆ) 1892

இ) 1894

ஈ) 1890

விடை : இ) 1894

9) உ.வே.சா. அவர்கள் எழுதிய வாழ்க்கை
வரலாற்று நூலின் பெயர் -----

அ ) என் சரித்திரம்

ஆ) தமிழர் வரலாறு

இ) தமிழ்மொழி வரலாறு

ஈ) தமிழ்ச்சரித்திரம்

விடை : அ ) என் சரித்திரம்

10) உ.வே.சா. அவர்களின் முயற்சியால் 1889 ஆம் ஆண்டில் ------ நூல் பதிப்பிக்கப்பட்டது.

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) சிலப்பதிகாரம்

ஈ) மணிமேகலை

விடை : ஆ) பத்துப்பாட்டு

11) உ.வே.சா.உரை எழுதிய முதல் நூல் -----

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) சீவகசிந்தாமணி

ஈ) வளையாபதி

விடை : ஆ) மணிமேகலை

12) சென்னைப்பல்கலைக்கழகம் உ.வே.சா. அவர்களுக்கு ------ பட்டம் வழங்கியது.

அ) மதிப்புறு முனைவர்

ஆ) தமிழ்ச்செம்மல்

இ) தமிழ்ப்பேரறிஞர்

ஈ) பதிப்புச்செம்மல்

விடை :  அ) மதிப்புறு முனைவர்

13) உ.வே.சா.அவர்களுக்குப் பொருந்தாத
அடைமொழி  எது?

அ) மகாமகோபாத்தியாய

ஆ) தக்ஷிண கலாநிதி

இ) மகாவித்துவான்

விடை : இ) மகாவித்துவான்

14) உ.வே.சா.பெயரில் சென்னையில்
நூலகம் அமைந்துள்ள இடம் ------

அ) அண்ணா நகர்

ஆ) கலைஞர் நகர்

இ) சைதாப்பேட்டை

ஈ) பெசன்ட்நகர்

விடை :  ஈ) பெசன்ட்நகர்

15 ) உ.வே.சா அவர்கள் எழுதிய என் சரித்திரம் தொடர் இதழில் வெளிவந்தது.

அ ) கல்கி

ஆ) ஆனந்த விகடன்

இ) குமுதம்

ஈ ) கலைமகள்

விடை : ஆ) ஆனந்த விகடன்

16 ) சிலப்பதிகாரம் ----- ஆண்டில் உ.வே.சா.
அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.

அ) 1892

ஆ) 1893

இ) 1894

ஈ) 1895

விடை : அ) 1892

17) இந்திய அரசு தமிழ்த்தாத்தா உ.வே.சா.
அவர்களுக்குச் செய்த சிறப்பு -----

அ ) அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்தது

ஆ) சிலை அமைத்தது

இ) நினைவு அஞ்சல் தலை வெளியிட்டது

ஈ) நினைவு இல்லம் அமைத்தது

விடை : இ) நினைவு அஞ்சல் தலை வெளியிட்டது

18) உ.வே.சா.அவர்கள் பிறந்த
உத்தமதானபுரம் ----- மாவட்டத்தில்
தற்போது உள்ளது.

அ) தஞ்சாவூர்

ஆ) நாகைப்பட்டினம்

இ) திருவாரூர்

ஈ) திருச்சி

விடை :  இ) திருவாரூர்

19 ) சீவகசிந்தாமணி நூலை உ.வேசா. அவர்களுக்குப் படிக்கக் கொடுத்தவர் -----

அ) மாயூரம் முன்சிப் வேதநாயகம்பிள்ளை

ஆ) முன்சிப் சேலம் இராமசாமி முதலியார்

இ) தண்டபாணிதேசிகர்

ஈ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை

விடை : ஆ) முன்சிப் சேலம் இராமசாமி முதலியார்

20 ) சீவகசிந்தாமணி ----- காவியம்.

அ) சைவக்

ஆ) வைணவக்

இ) சமணக்

ஈ) பௌத்தக்

விடை : இ) சமணக்

Post a Comment

0 Comments